திசைகாட்டி ஆட்சிக்கு வந்து 114 நாட்களே… என்ன செய்தார்கள்…
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுர குமார திசாநாயக்க வெற்றிபெற்ற பின்னர் 2025 ஜனவரி 14 ஆந் திகதியளவில் கழிந்த 114 நாட்கள் காலப்பகுதியில் நிகழ்கால தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் மக்களுக்கு அளித்த அரசியல், கலாசார, சமூக மற்றும் பொருளாதார வெற்றி பற்றி சுருக்கமாக அசைபோட்டுப் பார்ப்போம்.
01. ஜனாதிபதி வெற்றிபெற்ற பின்னர் நடைபெற்ற உறுதிப்பிரமாணம் செய்கின்ற வைபவம் பண விரயத்திற்கு முற்றுப்புள்ளிவைத்து மிகவும் எளிமையாகவே நடைபெற்றது. அது அரசியல் கலாசாரத்தை மாற்றியமைக்கின்ற திருப்பு முனையாகும்.
02. ஒரு ஜனாதிபதி என்றவகையில் பரிவாரசேனைகள் புடைசூழ வாகன ஊர்வலம், எண்ணிலடங்கா பாதுகாப்பு படையினரை ஈடுபடுத்தி பயணிப்பதை நிறுத்தி அந்த பணத்தை சேமித்தமை. அதுவும் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்த பிரதான தருணமாகும்.
03. ஜனாதிபதி வீதியில் பயணிக்கையில் மக்களுக்கு ஏற்படுகின்ற இடையூறுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தமை. அதுவும் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்த பிரதான தருணமாகும்.
04. மூன்று அமைச்சர்களை உள்ளடக்கிய உலகின் மிகச்சிறிய அமைச்சரவையை நியமித்து அரசாங்கத்தை பேணிவந்தமை.
05. கமக்காரர்களுக்கு வழங்கிய 15,000 ரூபா உரமானியத்தை 25,000 ரூபா வரை அதிகரித்தமை.
06. ஓய்வூதியத்தை 3,000 ரூபாவினால் அதிகரித்தமை.
07. STF மற்றும் பொலீஸ் உத்தியோகத்தர்களின் நிலுவை பட்டா கொடுப்பனவினை செலுத்தியமை ( ஏறக்குறைய 30,000 ரூபா வரை)
08. மீனவர்களுக்காக எரிபொருள் மானியத்தை வழங்கியமை.
09. ஏக்கரொன்றுக்கு 12.5 கிலோ வீதம் MOP உரத்தை இலவசமாக வழங்குதல்.
10. நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலில் தேசிய மக்கள் சக்தியே இடைக்கால அரசாங்கத்தை நடாத்தி வந்ததோடு அதனூடாக எவ்விதத்திலும் அரச சொத்துக்களையும் அரசியல் பதவிகளையும் தேர்தலுக்காக பாவிக்காமை. அதுவும் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்த பிரதான தருணமாகும்.
11. 24 அமைச்சுக்களுக்காக 21 அமைச்சர்களைக்கொண்ட செலவு குறைந்த எளிமையான அமைச்சரவையை நியமித்தமை. அதுவும் அரசியல் கலாசாரத்தை மாற்றியமைத்த பிரதான தருணமாகும்.
12. 24 அமைச்சுக்களுக்காக 29 பிரதியமைச்சர்களை நியமித்ததோடு அதனையும் மிகவும் எளிமையாக மேற்கொண்டமை.
13. இந்நாட்டுக்கு முதலீட்டாளர்களின் வருகையை குறிக்குமுகமாக அமெரிக்காவின் முதன்மை பாதுகாப்பு துணைச்சாதன உற்பத்திக் கம்பெனியொன்று வத்துபிட்டிவெல ஏற்றுமதி தயாரிப்பு வலயத்தில் தனது தொழிற்சாலையை நிறுவுவதற்கான அடிக்கல் நாட்டியமை.
14. எப்பாவல பொஸ்பேற் படிவைப் பன்படுத்தி உரத்தை உற்பத்தி செய்கின்ற சவால்நிறைந்த செயற்பாட்டினை ஆரம்பித்துள்ளமை.
15. நிவ் லயிஃப் பயோ ரெக் தனியார் கம்பெனியின் ஓளடத உற்பத்தியகமொன்றை ஒயாமடுவ சுவசிறிபுர கைத்தொழில் வலயத்தில் நிர்மாணிப்பதற்கான அடிக்கல் நாட்டியமை.
16. உழைக்கும்போதே செலுத்துகின்ற வரியை அறவிடுகின்ற எல்லையை 100,000 ரூபாவில் இருந்து 150,000 ரூபாவாக உயர்த்தியமை.
17. அஸ்வெசும கொடுப்பனவினை அதிகரித்தமை.
18. அஸ்வெசும் உரிமை பெறுகின்ற குடும்பங்களையும் உள்ளிட்டதாக குறைந்த வருமானம் பெறுகின்ற குடும்பங்களைச் சேர்ந்த பாடசாலைப் பிள்ளைகளுக்காக ஒரு பிள்ளைக்கு 6,000 ரூபா வீதம் கொடுப்பனவினை வழங்குதல்.
19. அஸ்வெசும செலுத்தப்படுகின்ற காலத்தை நீடித்தல்.
20. ஒரு லீற்றர் லங்கா சுப்பர் டீசலை 39 ரூபாவினால், ஒரு லீற்றர் லங்கா ஒட்டோ டீசலை 21 ரூபாவினால், ஒரு லீற்றர் ஒக்டேன் 92 பெற்றோலை 23 ரூபாவினால் அத்துடன் ஒரு லீற்றர் ஒக்டேன் 95 பெற்றோலை 06 ரூபாவினாலும் குறைத்துள்ளமை.
21. சரிந்துகொண்டிருந்த பங்குச் சந்தையினை மீண்டும் முனைப்பான மட்டத்திற்கு கொண்டுவந்தமை மற்றும் இன்றளவில் இற்றைவரை இலங்கை வரலாற்றில் நாளுக்கான மிக அதிகமான பங்கு விலைச் சுட்டெண் பெறுமானம் அண்மையில் பதிவாகியமை. இலங்கையின் பங்குச் சந்தை தெற்காசியாவின் மிகச்சிறந்த முனைப்பாக இயங்கிவருகின்ற பங்குச் சந்தைகள் மத்தியில் இரண்டாவது இடத்தைப் பெற்றுள்ளமை.
22. மூடப்பட்டுள்ள சதொச, கூட்டுறவு மற்றும் அரசாங்கத்தின் ஏனைய அரிசியாலைகளை மறுசீரமைத்து இயல்புநிலைக்கு கொண்டுவருவதற்கான இயலுமையை கண்டறிதல். அப்பணிகளை ஆரம்பித்தமை.
23. கைவிடப்பட்டுள்ள நெற்களஞ்சியங்களை மறுசீரமைத்து எதிர்காலத்தில் நெல்லைக் களஞ்சியப்படுத்தக்கூடிய மட்டத்திற்கு மாற்றியமைக்கத் தொடங்குதல்.
24. விற்பனைக்காக போடப்பட்டுள்ள சதொசவை மீண்டும் முனைப்பானதாக இயக்கி அரிசித் தட்டுப்பாட்டினால் மக்கள் படுகின்ற அவஸ்தயை போக்கி அரிசியை விநியோகித்தல்.
25. மதிப்பிறங்கியுள்ள ரூபாவை பலப்படுத்தி ஒரு டொலருக்கு 295 ரூபா வரை கொண்டுவருதல்.
26. ஜனாதிபதி, பிரதமர் உள்ளிட்ட பிரமுகர்களின் பதவியணிக்காக உறவினர்களை ஈடுபடுத்தாமை.
27. அரசாங்கத் தரப்பு பாராளுமன்ற உறுப்பினர்கள் திருட்டு, ஊழல், மோசடிகளில் பங்கேற்காமை.
28. அமைச்சர்களுக்கும் குடும்பத்தின் பிள்ளைகளுக்கும், மருமக்களுக்கும் அரசாங்கத்தின் சொகுசு வாகனங்களை வழங்காமை மற்றும் அரசாங்க செலவில் கொழும்பு 7 இல் சொகுசு இல்லங்களை வழங்காமை.
29. இரண்டு ஜனாதிபதி மாளிகைகளைத் தவிர ஏனைய மாளிகைகளை சுற்றுலாக் கைத்தொழிலுக்காக வழங்கியமை.
30. பிரதமருக்காக ஒதுக்கப்பட்டிருந்த சுகாதாரக் கூறு கலைக்கப்பட்டமையும் அதன் பிணியாளர் (அம்பியுலன்ஸ்) வண்டிகள், மருத்துவ உபகரணங்களை தேசிய வைத்தியசாலைக்கு ஒப்படைத்தமையும்.
31. மது வரி செலுத்தாமல் இருந்த ஜோன்ஸ்டன் உடனடியாக நிலுவை மற்றும் அபராதத் தொகையுடன் மதுவரியை செலுத்தியமை.
32. மது வரியைச் செலுத்தாத அலோசியசிற்கு எதிராக சட்டத்தை அமுலாக்கியமை.
33. திறைசேரி பிணைமுறி விநியோகம் தொடர்பான புலன் விசாரணைகள், உயிர்த்த ஞாயிறு தாக்குதல் தொடர்பாக மேற்கொள்ளப்படுகின்ற புலன்விசாரணைகள், தினேஷ் ஷாப்டர் படுகொலையுடன் தொடர்புடைய புலன்விசாரணை, (இதுவரை ஒரு தற்கொலையாகவே கருதப்படுகின்றது.) 2007 ஆம் ஆண்டில் கிழக்கு பல்கலைக்கழகத்தின் உபவேந்தர் பேராசிரியர் ரவீந்திரநாத் சுப்பிரமணியம் காணாமல் போனமை தொடர்பான புலன்விசாரணை, 2023. 12. 31 ஆந் திகதி வெலிகம W15 ஹோட்டலுக்கு எதிரில் வெலிகம பொலீஸாரால் மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கிப் பிரயோகத்தில் பொலீஸ் காண்ஸ்டபிள் ஒருவர் இறந்தமை பற்றிய புலன் விசாரணை, ஊடகவியலாளர் தாரகி சிவராம் (தர்மரத்னம் சிவராம்) படுகொலையுடன் தொடர்புடைய புலன் விசாரணை, லலித் குமார் மற்றும் குகன் முருகநாதன் ஆகிய இருவரும் காணாமல்போகச் செய்விக்கப்பட்டமை பற்றிய புலன்விசாரணைகளை துரிதப்படுத்தியமை.
34. மேலும் இந்நாட்டில் பரபரப்பினை ஏற்படுத்திய சம்பவங்களுடன் தொடர்புடைய (கிறிஷ் கொடுக்கல் வாங்கல், யோஷித ராஜபக்ஷவின் காணி, லசந்த படுகொலை, தாஜுடீன் படுகொலையை உள்ளிட்ட) விசாரணைகளை துரிதப்படுத்தியமை.
35. தேர்தலுக்காக செயலாற்றியமையின் அடிப்படையில் வைத்தியசாலைகள், மின்சாரம், கல்வி, விமான நிலையம், இபோச, வீடமைப்பு ஆகிய அரசாங்க நிறுவனங்களில் தொழில்களை வழங்கி நிரப்புவதற்கு முற்றுப்புள்ளி வைத்தமை.
36. இனவாத, மதவாத அடிப்படையில் நாட்டில் நிலவிய அவநம்பிக்கை மற்றும் சுதந்திரம் அற்றுப்போதலை ஒழித்தமை.
37. பொலீஸாரை அரசியல் அழுத்தங்களிலிருந்து விடுவித்தல்.
38. அறுகம் குடா சம்பவத்தின்போது நாட்டின் பாதுகாப்பு தொடர்பில் முறைப்படியும் துரிதமாகவும் செயலாற்றி நாட்டைப் பாதுகாத்தமை.
39. டிஜிட்டல் பொருளாதாரமொன்றை நோக்கி பயணிக்கின்ற பணிகளை தொடங்கியமை.
40. உலகின் உச்சமட்டத்தில் இருக்கின்ற புத்திஜீவிகளுக்கு வாய்ப்பினை வழங்கி நாட்டுக்கு மீண்டும் புத்துயிரளிக்கும் செயற்பாங்கினை பலப்படுத்தியமை.
41. உலகின் பல்வேறு நிறுவனங்களில் உயர்ந்த சம்பள அடுக்குகளில் சேவையாற்றிய புத்திஜீவிகள் அந்த சம்பளத்தைக் கைவிட்டு இந்நாட்டில் எந்தவிதமான சம்பளத்தையும் பெறாமல் தன்னிச்சையாக நாட்டுக்கு செயலாற்றுவதற்காக வருகைதந்தமை.
42. நாளொன்றில் 06 ஆக நிலவிய பஸ் வண்டி விபத்துக்களின் எண்ணிக்கையை 02 ஆக குறைப்பதில் வெற்றிகண்டமை.
43. யோகற், பால் பெக்கெற், திரவப் பால் விலையை 15% ஆல் குறைத்தமை.
44. பொருளாதார, அரசியல், சமூக மற்றும் கலாசார நிலைமாற்றத்திற்கான கிளீன் ஸ்ரீலங்கா கருத்திட்டத்தை ஆரம்பித்தமை.
45. கோட்டாபய ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் 2020 ஆம் ஆண்டில் இல்லாதொழித்த ஓய்வூதியத்தை அதிகரிக்கின்ற செயற்பாங்கினை மீண்டும் அமுலாக்கியமை.
46. வெளிநாட்டு விஜயங்களின்போது குடும்பத்தாரை புடைசூழ அழைத்துச்சென்று மக்களின் பணத்தை விரயமாக்காமல் அத்தியாவசியமான ஆட்களை மாத்திரம் கூட்டிக்கொண்டு போனமை.
47. வெளிநாட்டு விஜயங்களின்போது இந்நாட்டின் டிஜிட்டல்மயமாக்கல் செயற்பாங்கிற்கான கொடையளிப்பாக ஒத்துழைப்பினை பெற்றுக்கொள்ள முடிந்தமை மற்றும் இந்தியக் கடன்களை உதவிகளாக மாற்றிக்கொண்டமை.
48. கடந்த காலங்களில் நிலவிய அரசாங்கங்களால் விற்பனைக்காக போடப்பட்டிருந்த திருகோணமலையின் எண்ணெய்க் குதங்கள் தொகுதியை பெற்றோலியக் கூட்டுத்தாபனத்தின்கீழ் மீண்டும் மறுசீரமைக்க திட்டமிட்டமை.
49. நெல் கொள்வனவுக்காக 50 மில்லியன் ரூபாவினை உச்சஎல்லை வரையான கடன்களை வழங்கியமை.
50. கடந்த ரனில் – ராஜபக்ஷ ஆட்சிக்காலத்தில் தான்தோன்றித்தனமாக சேவையிலிருந்து இடைநிறுத்திய 62 மின்சார சபை ஊழியர்களின் சேவையை மீண்டும் வழங்கியமை.
51. இதுவரை நிலையான வைப்புக்களை உள்ளிட்ட வைப்புக்களிலிருந்து அறவிடப்பட்ட 5% தடுத்துவைத்தல் வரியை வட்டி வருமானம் 150,000 ரூபாவிற்கு குறைவான தொகுதிக்கு எதிர்வரும் ஏப்பிறல் மாதத்தின் பின்னர் அறவிடாமை.
52. பாராளுமன்ற உறுப்பினர்களின் சுங்கத்தீர்வையற்ற வாகனத் திட்டத்தை இல்லாதொழித்தல்.
53. ராஜபக்ஷ அரசாங்கமும் ரனில் விக்கிரமசிங்க அரசாங்கமும் நல்லாட்சி அரசாங்கமும் விற்பனைக்காக விடப்பட்டிருந்த திரிபோஷ கம்பெனியை மீண்டும் அரசாங்கத்தின்கீழேயே இயங்கச் செய்வித்தமை.
54. 2024 இல் ஜனாதிபதியின் செலவுகளுக்காக 6.6 பில்லியன் ரூபா ஒதுக்கப்பட்டிருந்ததோடு 2025 ஆம் ஆண்டுக்காக மேற்படி செலவினை 2.9 பில்லியன் ரூபா வரை குறைத்துள்ளமை விசேட அம்சமாகும். அதன்படி ஜனாதிபதியின் செலவுகள் 3.7 பில்லியன் ரூபாவினால் வெட்டிவிடப்பட்டுள்ளது.
பொருளாதாரப் பிரச்சினைகளைத் தீர்த்துவைக்கவும் நாட்டின் பொதுச் சொத்துக்கள், மக்களின் செல்வத்தை விரயமாக்கிய , திருடிய, மோசடி – ஊழல்களில் ஈடுபட்டவர்களுக்கு எதிராக சட்டத்தை அமுலாக்க சிறிதளவு காலம் கழிகின்ற போதிலும் கட்டாயமாக அது இடம்பெறும். அதுவரை பொறுமையுடன் காத்திருங்கள்,…. நாட்டை சுத்தமாக்கும் நற்பணியில் நீங்களும் ஒன்று சேருங்கள்……
ஸ்ரீமால் சக்ரவர்த்தி