தமிழரசுக் கட்சி ஐக்கிய தேசியக் கட்சி ஐக்கிய மக்கள் சக்தி ஓரணியில்!
பாராளுமன்றத்திற்கு உள்ளேயும் வெளியேயும் மக்கள் குரலை மேலும் மேலோங்கச் செய்து, வலுவான எதிர்க்கட்சியைக் கட்டியெழுப்பும் நோக்கில் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையில் எதிர்க்கட்சியைச் சேர்ந்த கட்சித் தலைவர்கள் இன்று கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இச்சந்திப்பில், நாடாளுமன்ற உறுப்பினர்களான மனோ கணேசன், பழனி திகாம்பரம், அனுராத ஜயரத்ன, சாணக்கியன, ஜே.சி. அலவத்துவல, அஜித் பி. பெரேரா, ரவி கருணாநாயக்க உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.