யாழ். மாவிட்டபுரத்தில் வைக்கப்பட்டுள்ள மாவையின் புகழுடலுக்கு தமிழர் திரண்டு அஞ்சலி!

26

 

இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மூத்த தலைவரும் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினருமான மாவை சேனாதிராஜாவின் பூதவுடல் மக்கள் அஞ்சலிக்காக யாழ். மாவிட்டபுரத்தில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.
இன்று காலை மாவை சேனாதிராஜாவின் பூதவுடலுக்கு இலங்கைத் தமிழரசுக் கட்சியின் நாடாளுமன்ற குழுத் தலைவர் சிவஞானம் சிறீதரன் தலைமையில் நாடாளுமன்ற உறுப்பினர்களான ஞானமுத்து ஸ்ரீநேசன், கவீந்திரன் கோடீஸ்வரன், முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர்களான பாக்கியசெல்வம் அரியநேத்திரன், சீனித்தம்பி யோகேஸ்வரன் மற்றும் கட்சியின் பொருளாளர் பெரியதம்பி கனகசபாபதி ஆகியோரால் கட்சியின் கொடி போர்க்கப்பட்டு மதிப்பளிக்கப்பட்டு அஞ்சலி செலுத்தப்பட்டது.
அத்தோடு மதத் தலைவர்கள், கட்சி உறுப்பினர்கள், பொதுமக்கள் எனப் பலரும் அஞ்சலி செலுத்தி வருகின்றனர்.
1942 ஆம் ஆண்டு ஒக்டோபர் மாதம் 27ஆம் திகதி பிறந்த மாவை சேனாதிராஜா சிகிச்சை பலனின்றி யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் நேற்று இரவு காலமானார்.
SHARE