தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அந்தஇடத்தில் இருந்து அகற்ற முடியாது!

38



தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியாது என புத்தசாசன, சமய மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனெவி (Sunil Senevi) தெரிவித்துள்ளார்.



அத்துடன், தையிட்டி விகாரை எந்தக் காணியில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்தக் காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்க அரசு நடவடிக்கை எடுக்கும் எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

இது தொடர்பில் ஊடகங்களுக்கு மேலும் அமைச்சர் கருத்து தெரிவிக்கையில்,“ நாட்டில் அமைந்துள்ள எந்த மதத் தலங்களையும் அகற்ற முடியாது. அது மத ரீதியான, இன ரீதியான வன்முறைகளுக்கே வழிவகுக்கும்.

SHARE