மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி மாணவர்களுக்கு பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பில்  பயிற்சி அமர்வு

37

 

 

பாறுக் ஷிஹான்

பாடசாலை மத்தியஸ்தம் தொடர்பில் மாணவர்களுக்கு  தெளிவூட்டும் செயலமர்வு நீதி சிறைச்சாலை அலுவல்கள் மற்றும் அரசியல் அமைப்பு மறுசீரமைப்பு  அமைச்சின் மத்தியஸ்த ஆணைக்குழு   பங்களிப்புடன்  மருதமுனை அல் மனார் மத்திய கல்லூரி    இன்று  நடைபெற்றது.

கல்லூரியின் முதல்வர் ஐ.உபைதுல்லா   வருகை தந்து  வரவேற்புரையுடன் இச்செயலமர்வினை ஆரம்பித்து வைத்தார்.அம்பாறை  மாவட்டம் கல்முனை கல்வி வலயத்திற்குட்பட்ட இப்பாடசாலையில் இருந்து  சுமார் 75 க்கும் அதிகமான   மாணவ மாணவிகள்  கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது  செயலமர்வில் மாவட்ட ஒருங்கிணைப்பு உத்தியோகத்தர் எஸ்.றிஸ்மினா   வளவாளராக  கலந்து கொண்டு மாணவர்களுக்கு பல்வேறு பாடசாலை மத்தியஸ்தம்  மத்தியஸ்த வரலாறு முரண்பாடு தொடர்பில் பல்வேறு விளக்கங்களை வழங்கினார்.

மேலும் இச்செயலமர்வானது   மத்தியஸ்த அபிவிருத்தி  உத்தியோகத்த பாறுக் ஸிஹானின்  பங்களிப்புடன் பிரதி அதிபர் எம்.சி நஸார், ஜே.எம்.எம்.நியாஸ்  ஆகியோர் கலந்து கொண்டிருந்தனர்.

இதன் போது  பாடசாலை மத்தியஸ்தம்  மத்தியஸ்த வரலாறு, முரண்பாடு  தீர்வின் முக்கியத்துவம், தொடர்பாடல் கலந்துரையாடல், மத்தியஸ்த படிமுறைகள் பாடசாலை மத்தியஸ்தத்தில் மாணவர்களின்  பங்கு என்பன   தெளிவூட்டப்பட்டன.

 
 
SHARE