அரசின் உயர் மட்ட அதிகாரிகள் 50 பேருக்கு எதிராக வழக்குகள் தாக்கல் செய்ய ஊழல் எதிர்ப்பு ஆணைக்குழு தீர்மானம்

அரசியல் ஊழல் மற்றும் மோசடிகளை விசாரணை செய்யும் ஆணைக்குழுவினால் தற்போது சுமார் 50 முறைப்பாடுகளுக்கு எதிராக மேற்கொள்ளப்பட்ட விசாரணைகள் முடிவடைந்துள்ள நிலையில், மிகவும் விரைவில் நீதிமன்றத்தில் வழக்குத் தாக்கல் செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
இந்த முறைப்பாடுகளில் பெரும்பாலானவை அரச உத்தியோகத்தர்களை தொடர்புபடுத்தியவை எனவும், அதில் அரசின் மூத்த அதிகாரிகள் சிலருக்கு எதிராகவும் குற்றச்சாட்டு எழுப்பப்பட்டுள்ளன என தெரிவிக்கப்படுகிறது.
மேலும், இம்முறைப்பாடுகளுக்கு முந்தைய காலங்களில் விசாரணைகள் முடிவடைந்து, ஆனால் இதுவரை வழக்குகள் தாக்கல் செய்யப்படாத குற்றச்சாட்டுகளும் அடங்கும்.
இந்த வழக்குகள் கொழும்பு மேல் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.