இயேசு கிறிஸ்து தனது சீடர்களுக்கு தீமையை அகற்றி அனைத்து நன்மைகளுக்காகவும் செயற்படுமாறு காட்டினார். பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்கள், கிறிஸ்து காட்டிய பாதையை நன்கு உணர்ந்து, கத்தோலிக்க திருச்சபைக்கு வழங்கிய தலைமைத்துவம் கத்தோலிக்க சமூகத்திற்கு மட்டுமல்லாது, உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் ஒரு முன்மாதிரியாக விளங்கியது. அவருடைய மறைவு நல்லுலகை விரும்புபவர்களுக்கு பெரும் இழப்பாகும். அவருடைய எளிமையான வாழ்க்கை காட்டிய பாதையை நன்கு அறிந்துகொள்வதே அவருக்கு செய்யக்கூடிய உண்மையான மரியாதையாகும். மறைந்த பரிசுத்த பாப்பரசர் பிரான்சிஸ் அவர்களின் ஆத்மா இறைவனின் இல்லத்தில் இளைப்பாற பிரார்த்திக்கிறோம்.