யேர்மனியில் இலங்கை உளவாளிகள்…..

431

யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு முன்னராக ஒன்றுகூடிய தமிழ் உறவுகள் தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணையே பரிகார நீதியை நிலைநாட்டும் என வலியுறுத்தி கவனயீர்ப்பை மேற்கொண்டனர் .

மாலை நேரம் நடைபெற்ற கவனயீர்ப்பை தமது காரியாலய கடமையை நிறைவுக்கு கொண்டு வீடு சென்ற அதிகாரிகள் கவனத்தில் கொண்டது குறிப்பிடத்தக்கது . அத்தோடு தமிழின அழிப்புக்கு அனைத்துலக சுயாதீன விசாரணை ஒன்றே நீதியானது என்ற வாசகங்களோடு பாரிய பதாதைகளை தாங்கிய வண்ணம் மக்கள் கலந்துகொண்டனர் .

இலங்கை அரசின் உள்ளக விசாரணையை தமிழர்கள் ஆகிய நாம் கடந்த கால வரலாற்றின் அடிப்படையில் முற்றுமுழுதாக நிராகரிகின்றோம் என்பதையும் , வடமாகாண சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தையும் வலியுறுத்தி அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையின் சார்பாக மனு ஒன்றும் யேர்மன் வெளிவிவகார அமைச்சுக்கு கையளிக்கப்பட்டது .

கவனயீர்ப்பில் ஈடுபட்ட தமிழ் மக்களை ஸ்ரீலங்கா தூதரகத்தின் உளவாளியும் , பணியாளருமான யேர்மன் நபர் ஒருவர் தொடர்ச்சியாக கவனித்து வந்ததோடு , நிழற்படங்களையும் எடுத்து அச்சத்தை ஏற்படுத்த முயற்சித்தார் .

குறிபிட்ட நபரின் ஊடாக ஸ்ரீலங்கா தூதரகம் பேர்லினில் முன்னெடுக்கப்படும் போராட்டங்களை முறியடிக்க முயற்சி செய்து வருவதும் , மக்களை அச்சம் கொள்ள வைப்பதும் தொடர்ச்சியாக நடைபெற்று வருகின்றது . இப் போராட்டத்தில் வருகை தந்திருந்த ஸ்ரீலங்கா தூதரகத்தின் பணியாளர் இறுதியில் ஏற்பட்ட வாக்குவாதத்தின் பின்னர் துரத்தி வைக்கப்பட்டார் .

அத்தோடு பேர்லினில் நடைபெற்ற தேசியசெயற்பாட்டாளர்களுக்கு எதிராக நீண்ட காலமாக நடைபெற்ற வழக்கிலும் நீதிமன்றத்தில் தொடர்ச்சியாக பார்வையாளராக நுழைந்து அனைத்து தரவுகளையும் சேகரித்தது குறிப்பிடத்தக்கது . சிங்கள பேரினவாத அரசின் பயங்கரவாதம் முள்ளிவாய்கால் தமிழின அழிப்புக்கு பின்னரும் இன்றும் புலம்பெயர் நாடுகளில் தொடர்வதற்கு இதுவே சிறந்த உதாரணம் .

எத்தடை வரினும் கொண்ட குறிக்கோளுக்காக எமது விடுதலைப் பயணம் தொடரும் என்பதுக்கு நடைபெற்ற கவனயீர்ப்பு நிகழ்வு சான்றாக அமைகின்றது .berlin1

berlin2

berlin3

berlin4

berlin5

berlin6

berlin7

SHARE