மோடியின் பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள இலங்கை ஜனாதிபதி ராஜபக்ச இன்று காலை டெல்லி சென்றடைந்துள்ளார
நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெற்ற பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசு இன்று பொறுப்பேற்றுக் கொள்கிறது. இதையடுத்து நரேந்திர மோடி இன்று மாலை பிரதமராக பதவியேற்கிறார். மோடி பதவியேற்பு விழாவில் கலந்து கொள்ள வருமாறு இலங்கை உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது.
மோடியின் அழைப்பை ஏற்று பதவியேற்பு விழாவுக்கு வருவதாக இலங்கை அதிபர் ராஜபக்ச தெரிவித்தார். இதற்கிடையே இலங்கை போரின்போது அப்பாவி தமிழர்களை கொன்று குவித்த ராஜபக்சவை அழைத்ததற்கு தமிழக முதல்வர் ஜெயலலிதா, திமுக தலைவர் கருணாநிதி உள்ளிட்ட தலைவர்கள் கடும் கண்டனம் தெரிவித்தனர். மேலும் ராஜபக்ச வருகையை கண்டித்து ஜெயலலிதா மோடியின் பதவியேற்பு விழாவை புறக்கணிக்கிறார். இந்நிலையில் பதவியேற்பு விழாவில் பங்கேற்க ராஜபக்ச இன்று காலை டெல்லி வந்தார். மிக பலத்த பாதுகாப்புடன் அவர் விமான நிலையத்தில் இருந்து அழைத்துச் செல்லப்பட்டார். அவரது வருகையை எதிர்த்து மதிமுக பொதுச் செயலாளர் வைகோ தலைமையில் டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தரில் இன்று கருப்புக் கொடி போராட்டம் நடைபெறுகிறது என்பது குறிப்பிடத்தக்கது
ஜனாதிபதி புதுடெல்லிக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார்
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ இந்தியாவின் புது டெல்லிக்கான பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
பாரதீய ஜனதா கட்சியின் பிரதமர் வேட்பாளர் நரேந்திர மோடியின் பதவி;ப் பிரமாண நிகழ்வுகளில் பங்கேற்கும் நோக்கில், ஜனாதிபதியும் பிரதிநிதிகள் குழுவினரும் இன்று காலை இந்திய விஜயத்தை ஆரம்பித்துள்ளனர்.
இந்தியாவின் 15ம் பிரதமராக மோடி இன்று மாலை பதவிப் பிரமாணம் செய்து கொள்ள உள்ளார்.
பாகி;ஸ்தான் பிரதமர் நவாஸ் ஷெரீப் உள்ளிட்ட சார்க் நாடுகளின் தலைவர்கள் இந்த நிகழ்வில் பங்கேற்க உள்ளனர்.
இலங்கை ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ நாளைய தினம், நரேந்திர மோடியுடன் இரு தரப்பு உறவுகள் தொடர்பில் பேச்சுவார்த்தை நடத்த உள்ளார்.
இலங்கைத் தமிழர் பிரச்சினைக்கான தீர்வுத் திட்டம், 13ம் திருத்தச் சட்டம் மற்றும் இந்திய இலங்கை மீனவர் பிரச்சினை ஆகியன தொடர்பில் கூடுதல் கவனம் செலுத்தப்படும் என அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இலங்கை பிரதிநிதிகள் குழுவுடன் இணைந்துகொள்ளுமாறு வட மாகாணசபையின் முதலமைச்சர் சீ.வீ. விக்னேஸ்வரனுக்கு ஜனாதிபதி விடுத்த அழைப்பினை, விக்னேஸ்வரன் நிராகரித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் புதிய பிரதமர் நரேந்திர மோடியின் பதவியேற்பு விழாவில் பங்குகொள்வதற்காக இன்று புதுடில்லி பயணமாகும் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ, புதிய இந்தியப் பிரதமருடன் இரு தரப்பு விடயங்கள் தொடர்பில் நாளை செவ்வாய்கிழமை பேச்சுவார்த்தைகளை நடத்தவுள்ளார்.
இரு தலைவர்களுக்கும் இடையிலான பேச்சுக்களில் இரு விடயங்கள் குறித்து முக்கியமாக ஆராயப்படும் என இராஜதந்திர வட்டாரங்கள் தெரிவித்தன. இரு தரப்பு மீனவர் பிரச்சினை, அரசியலமைப்புக்கான 13 ஆவது திருத்தத்தை முழுமையாக நடைமுறைப்படுத்தி இன நெருக்கடிக்கு அரசியல் தீர்வொன்றைக் காணல் என்பன தொடர்பாகவே இரு தரப்பு பேச்சுக்களின் போது மக்கியமாக ஆராயப்படும்.
மோடி பதவியேற்கும் நிலையில் தன்னுடைய நல்லெண்ணத்தை வெளிப்படுத்தும் முகமாக இலங்கையில் தடுத்துவைக்கப்பட்டுள்ள இந்திய மீனவர்கள் அனைவரையும் விடுவிக்குமாறு ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ நேற்று அறிவித்திருந்தார். இந்த நல்லெண்ண நடவடிக்கையை மோடி உடனடியாகவே வரவேற்றிருந்தார்.
ஜனாதிபதி மகிந்த ராஜபக்ஷ தலைமையில் இன்று டில்லி செல்லும் இலங்கைத் தூதுக்குழுவில் வெளிவிவகார அமைச்சர் பேராசிரியர் ஜீ.எல்.பீரிஸ், அமைச்சர் ஆறுமுகம் தொண்டமான், பாராளுமன்ற உறுப்பினர் சஜின் வாஸ் குணவர்த்தன, யாழ். மேயர் யோகேஸ்வரி பற்குணராஜா ஆகியோர் இடம்பெறுகின்றார்கள்.