நவீன ரக Processor உடன் அறிமுகமாகவுள்ள Sony Xperia Z5 Ultra

409
Sony நிறுவனம் Xperia Z5 Ultra எனும் புத்தம் புதிய ஸ்மார்ட் கைப்பேசியினை அடுத்த வருடம் அறிமுகம் செய்யவுள்ளது.Qualcomm Snapdragon 820 Processor உடன் அறிமுகம் செய்யப்படவுள்ள இக்கைப்பேசியானது 6.44 அங்குல அளவு, 3840 x 2160 Pixel Resolution உடைய தொடுதிரையினைக் கொண்டுள்ளதுடன், பிரதான நினைவகமாக 4GB RAM உள்ளடக்கப்பட்டுள்ளது.

இவை தவிர 23 மெகாபிக்சல்களை உடைய பிரதான கமெரா, 5 மெகாபிக்சல்களை உடையதும் Exmor RS சென்சாரினை உடைய வீடியோ அழைப்புக்களை ஏற்படுததுவற்கான கமெராவும் இணைக்கப்பட்டுள்ளது.

மேலும் அன்ரோயிட் இயங்குதளத்தின் பிந்திய பதிப்பான Android 6.0 Marshmallow இனையும் கொண்டதாக இக் கைப்பேசி அடுத்த வருடம் பெப்ரவரி மாதமளவில் அறிமுகம் செய்யப்படவுள்ளது.

SHARE