இதுவரை ஆய்வு செய்யாத சந்திரனின் பகுதியில் காலடி பதிக்கும் சீனா

372
பூமியின் உப கோளாக இருக்கும் சந்திரனில் இதுவரை ஆய்வு செய்யப்படாத பகுதியில் காலடி பதிக்க சீனா திட்டமிட்டுள்ளது.Chang’e 4 எனும் மிஷன் ஊடாக எதிர்வரும் 2020 ஆம் ஆண்டளவில் இத் திட்டத்தினை நிறைவேற்ற எண்ணியுள்ளதாக Chinese Academy of Sciences அமைப்பில் பணியாற்றும் Zou Yongliao என்பவர் தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில் “இதுவரை ஆய்வு செய்யப்படாத சந்திரனின் பகுதிகளின் புவியல் நிலைகள் தொடர்பாக ஆராய்வதே முக்கிய நோக்கமாக இருக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை ஏற்கனவே திட்டமிட்டதன் படி 2017 ஆம் ஆண்டில் சந்திரனில் இருந்து மண் மற்றும் பாறைகளை பூமிக்கு எடுத்துவந்து ஆய்வில் ஈடுபடவும் சீனா எண்ணியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

SHARE