வரலாற்று புகழ்மிக்க நல்லூர் கந்தசாமி ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் தேர் திருவிழா இன்றைய தினம் பல்லாயிரக்கணக்கான பக்தர்களின் அரோகரா கோஷத்துடன் நடைபெற்றது.
இன்றைய தினம் காலை 7.30 மணிக்கு ஆரம்பமான தேர்திருவிழாவில் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். இதற்காகாக பாதுகாப்பு ஒழுங்குகளும் பலப்படுத்தப்பட்டிந்தன.
பொலிஸார் பக்தர்களுடன் பக்தர்களாக நின்றிருந்த நிலையில் பெருமளவு குற்றங்கள் தடுக்கப்பட்டு சுமுகமான முறையில் இன்றைய உற்சபம் நடைபெற்றது. சில திருட்டு முயற்சிகளும் தடுக்கப்பட்டது.