இலங்கையில் வருடம் ஒன்றுக்கு ஒரு மில்லியனுக்கும் மேல் பாலியல் உணர்வுகளை தூண்டும் மருந்து, மாத்திரைகள் விற்பனையாவதாக ஆபத்தான ஔடதங்கள் தொடர்பான தேசிய கட்டுப்பாட்டுச் சபை தெரிவித்துள்ளது.
வலி நிவாரணி மாத்திரையான பெரசிட்டமோல் மாத்திரை விற்பனைக்கு நிகராக, இந்த பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரைகள் விற்பனையாகி வருவதாக சபையின் தலைவர் மருத்துவர் சமீர திலங்க தெரிவித்துள்ளார்.
போதிளவுக்கு மேலதிக இவ்வாறான மருந்து, மாத்திரைகளை பயன்படுத்துவது பக்கவிளைவுகளை ஏற்படுத்துவதுடன் உயிரிழப்பையும் ஏற்படுத்தும்.
பாலியல் உணர்வுகளை தூண்டும் மாத்திரைகளை பயன்படுத்தியதன் காரணமாக சில உயிரிழப்புகள் ஏற்பட்டதாக அண்மையில் செய்திகள் வெளியாகி இருந்தன.
மாரவில – மூதுகட்டுவ பிரதேசத்தில் விடுதி ஒன்றில் ஆணும் பெண்ணும் தங்கியிருந்தனர். அதில் 52 வயதான ஆண் திடீரென சுகவீனமுற்று மாரவில வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்தார்.
உயிரிழந்தவர் அணிந்திருந்த காற்சட்டையில் சக்தியை அதிகரிக்கும் மருந்து ஒன்றில் வெற்று பொதி இருந்துள்ளதாக காவற்துறையின் ஊடகப் பேச்சாளர் அலுவலகம் குறிப்பிட்டுள்ளது.
இந்த மருந்தை பயன்படுத்தியதன் காரணமாவே மரணம் ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் சம்பவம் குறித்து மாரவில காவற்துறையினர் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.