அசுரவேகத்தில் கோச்சடையானின் கதை

546

கோட்டையப்பட்டினத்தில் நாட்டின் தலைமைத் தளபதி கோச்சடையான். தன் படைவீரர்களைக் காக்க அவர் செய்யும் ஒரு செயலால் தேசத் துரோக குற்றம் சாட்டப்பட்டு கொல்லப்படுகிறார். கோச்சடையானின் மகன் ராணா அவர் மீதான பழியை நீக்கி பழிவாங்குவதே கதை.
சிறுவன் ராணா கோட்டையப்பட்டினம் நாட்டில் இருந்து எதிரி நாடான கலிங்கபுரிக்கு போவதில் ஆரம்பிக்கப்படுகிறது. அங்கே வளரும் ராணா தன் வீரத்தால் படைத்தளபதி ஆகிறார். மனதிற்குள் ஒரு திட்டத்தோடு காய் நகர்த்தி, அந்த நாட்டின் மன்னன் ஜாக்கிஷெராப், இளவரசர் ஆதியை ஏமாற்றி, தான் நினைத்தபடியே கோட்டையப்பட்டினத்திற்குத் திரும்பி வருகிறார். கலிங்கபுரியில் மாமா நாகேஷ் கோச்சடையானின் தங்கையை வளர்த்து வருகிறார். கோச்சடையானின் அண்ணன் சிறுவயதிலேயே காணாமல் போய் விட்டதாகச் சொல்கிறார் நாகேஷ்.
ராணாவின் தங்கையை இளவரசர் சரத்குமார் காதலிக்க தீபிகா படுகோனே ராணாவை இந்த பண்டமாற்று முறையை அரசர் நாசரை கடுப்பேற்று விடுகிறது. கூடவே ராணாவின் பழிவாங்கும் கதையும் சேர்ந்து கொள்ள படம் அதன்பின் அசுரவேகத்தில் பயணிக்கிறது கோச்சடையானின் கதை

SHARE