பிரதமர் இந்தியா நோக்கி சென்றார்

290
மூன்று நாள் உத்தியோகபூர்வ விஜயம் மேற்கொண்டு பிரதமர் ரணில் விக்ரமசிங்க இன்று பகல் 2.20 மணியளவில் இந்தியா, புதுடில்லி நோக்கி சென்றுள்ளார்.

இலங்கை விமான சேவைக்கு சொந்தமான யூ.எல்.196 விமானத்தில் அவர் சென்றுள்ளார் என விமான நிலைய தகவல்கள் குறிப்பிட்டுள்ளது.

பிரதமருடன் 16 பேர் அடங்கிய பிரதிநிதி குழுவொன்று இந்தியா நோக்கி சென்றுள்ளதாக விமான நிலைய தகவல் வட்டாரங்கள் தெரிவித்துள்ளது.

அத்துடன் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவை வரவேற்பதற்கு புதுடில்லியில் அனைத்து நடவடிக்கைகளும் தயார் என தெரிவிக்கப்படுகின்றது.

பிரதமரை வரவேற்பதற்காக விசேட நிகழ்வொன்று நடத்துவதற்கான செயற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக குறிப்பிடப்படுகின்றது.

SHARE