எமது நிலைப்பாட்டில் மாற்றம் இல்லை- ஐ.நாவின் அதிரடி நடவடிக்கை: எம்.எ.சுமந்திரன்
பலரின் மனதில் சர்வதேச விசாரணை அல்லது உள்ளக விசாரணை என்ற இரண்டில் ஒன்றுதான் தெரிவாகியுள்ளதென குழப்பமான எண்ணம் உள்ளது. ஆனால் வரப்போகின்ற அறிக்கையானது முழுமையான சர்வதேச விசாரணை என்பதுதான் உண்மை.
இவ்வாறு கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினரும் சட்டத்தரணியுமான எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்துள்ளார்.
இன்று ஜெனிவாவில் நடைபெற்ற ஐ.நா மனித உரிமைகள் பேரவையின் 30 கூட்டத்தில் கலந்து கொண்ட பின்னர், லங்காசிறி 24 செய்தி சேவைக்கு வழங்கிய விசேட நேர்காணலில் தெரிவித்துள்ளார்.