யுத்த குற்ற விசாரணை அறிக்கையில் இடம் பெற்றுள்ள விடயங்கள் முன்கூட்டியே கசிவது குறித்து ஐ.நா கவலை

338

இலங்கையில் இடம்பெற்ற யுத்த குற்றங்கள் குறித்த விசாரணை அறிக்கையில் இடம்பெற்றுள்ள விடயங்கள் முன்கூட்டியே கசிவது குறித்து ஐ.நா கவலை கொண்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. இது குறித்து மேலும் தெரிய வருவதாவது ஐக்கிய நாடுகள் மனித உரிமை ஆணையாளர் அலுவலகம் மேற்கொண்ட விசாரணைகள்

குறித்த அறிக்கை இலங்கை அரசாங்கத்திற்கு வெள்ளிக்கிழமை கிடைத்துள்ள போதிலும் அரசவட்டாரங்கள் அந்த அறிக்கை குறித்து கடும் மௌனத்தை கடைப்பிடிக்கின்றன.

அதேபோன்று ஐநாவும் அறிக்கை குறித்து இறுக்கமான மௌனத்தை பின்பற்றுகின்றது. அறிக்கை பகிரங்கமாக வெளியிடப்படுவதற்கு முன்னர் அதிலுள்ள விடயங்கள் வெளியே கசிவது குறித்து ஐ.நா கடும் கவலை கொண்டுள்ளது. இதனை ஐ.நா வட்டாரங்கள் அரசாங்கத்திற்கும் தெரிவித்துள்ளன.

வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர இன்னும் சில மணிநேரங்களில்- இலங்கை நேரப்பபடி  3மணியளவில் ஜெனீவாவில் உரையாற்றவுள்ளார்.அவர் தனது உரையில் நல்லிணக்கம் தொடர்பான அரசாங்கத்தின் சாதனைகளை குறிப்பிடுவார்.யுத்தத்தின் இறுதி தருணங்களில் இடம்பெற்ற பாரிய மனித உரிமை மீறல்களை அரசாங்கம் எவ்வாறு கையாள போகின்றது என்பது குறித்தும் அவர் தனது உரையில் குறிப்பிடுவார்.

இதேவேளை ஐநாவிற்கு விஜயம் மேற்கொண்டுள்ள அரச குழுவுடன் கிழக்குமாகாண ஆளுநர் ஓஸ்டின் பெர்ணாண்டோவும் இணைந்து கொண்டுள்ளார்.அவர் சனிக்கிழமை அங்கு சென்றுள்ளார்.

SHARE