காணாமல் போனவர்கள் தொடர்பிலான உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு நிறுவப்படும் என இலங்கை அரசாங்கம் ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவையில் உறுதியளித்துள்ளது.
அரசியல் சாசன திருத்தங்களின் ஊடாக தேசிய இனப்பிரச்சினைக்கு அரிசயல் தீர்வுத் திட்டமொன்று முன்வைக்கப்படும் என வெளிவிவகார அமைச்சர் மங்கள சமரவீர உறுதியளித்துள்ளார்.
விசாரணை அறிக்கையை காலம் தாழ்த்தி வெளியிடுவதற்கு ஐக்கிய நாடுகள் மனித உரிமைப் பேரவை 29ம் அமர்வுகளில் இணங்கியமைக்காக நன்றி பாராட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.
அர்த்தபூர்வமான நல்லிணக்கம், ஜனநாயக நிறுவனங்களை வலுப்படுத்தல், நல்லட்சியை ஏற்படுத்தல், சட்டம் ஒழுங்கை நிலைநாட்டுதல், சமூகங்களுக்கு இடையில் நல்லிணக்கத்தை ஏற்படுத்தல் ஆகியவற்றை மேற்கொள்ள நடவடிக்கை எடுக்கப்படும் என குறிப்பிட்டுள்ளார்.
நல்லிணக்கத்தை ஏற்படுத்த அரசாங்கம் அவசர முனைப்புடன் செயற்பட்டு வருவதாகத் தெரிவித்துள்ளார்.
குற்றச்செயல்களுக்கு பொறுப்பு கூறுதல் மிகவும் அத்தியாவசியமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அனைத்து தரப்பினரையும் உள்ளடக்கிய வகையில் நல்லிணக்க முனைப்புக்களும் குற்றச் செயல்களுக்கு பொறுப்பு கூறுதல்களும் மேற்கொள்ளப்படும் என அவர் தெரிவித்துள்ளார்.