என்னை பற்றிய விமர்சனங்களை எப்போதும் பொருட்படுத்தமாட்டேன் என்று டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சா கூறியுள்ளார்.அமெரிக்க ஒபன் டென்னிஸ் போட்டியில் கலந்து கொண்ட சானியா மிர்சா, பெண்களுக்கான இரட்டையர் பிரிவில் சுவிட்சர்லாந்து வீராங்கனை மார்ட்டினா ங்கிசுடன் இணைந்து விளையாடியதில் சாம்பியன் பட்டத்தை வென்றுள்ளார்.
இந்த வெற்றியின் காரணமாக பாராட்டு மழையில் நனைந்து கொண்டிருக்கும் சானியர் மிர்சா இதுகுறித்து அளித்துள்ள போட்டியில், இந்த ஆண்டு எனக்கு மிகவும் சிறப்பானதாக அமைந்துள்ளது. விம்பிள்டன் பட்டத்துக்கு பிறகு அமெரிக்க ஓபன் பட்டத்தையும் வென்று இருப்பது மகிழ்ச்சி அளிக்கிறது. என்னை பற்றிய ஒன்றும் இல்லாத காரியங்களை கூட மீடியாக்கள் மிகைப்படுத்தி ஆதாயம் தேடுகின்றன. எனது நோக்கம் எல்லாம் சிறப்பாக டென்னிஸ் ஆடுவதில் மட்டுமே உள்ளதே தவிர என்னை பற்றி யார்? என்ன சொல்கிறார்கள் என்பதை பொருட்படுத்தமாட்டேன். எனக்காகவும், நாட்டுக்காகவும், எனது குடும்பத்துக்காகவும் டென்னிஸ் விளையாடுகிறேன். அதில் வெற்றி பெற வேண்டும் என்று முயற்சி செய்கிறேன் என்று கூறியுள்ளார். மேலும், சிங்கப்பூரில் இந்த ஆண்டு இறுதியில் நடைபெறும் உலக டூர் இறுதிப்போட்டியை ஆவலுடன் எதிர்நோக்கி இருக்கிறோம் என கூறியுள்ளார். |