மிகப்பெரிய உந்துசக்திகளாக விளங்கும் சானியா மிர்சா, லியாண்டர் பயஸ்: டிராவிட் புகழாரம்

360
சானியா மிர்சா, லியாண்டர் பயஸ் இருவரும் விளையாட்டு வீரர்களுக்கு மிகப்பெரிய உந்துசக்திகளாக விளங்குவதாக இந்திய முன்னால் கிரிக்கெட் வீரர் ராகுல் டிராவிட் புகழ்ந்துள்ளார்.டென்னிஸில் இந்தியாவின் சானியா மிர்சா பெண்கள் இரட்டையர் பிரிவிலும், லியாண்டர் பயஸ் கலப்பு இரட்டையர் பிரிவிலும் சாதித்து வரும் நிலையில், இவர்கள் இருவரும் மார்ட்டினா ஹிங்கிசுடன் இணைந்து விளையாடி வருகின்றனர்.

விம்பிள்டனில் இருவரும் சாம்பயின் பட்டம் பெற்ற நிலையில், நேற்றுடன் முடிந்த அமெரிக்க ஓபன் டென்னிசிலும் இருவரும் சம்பியன் பட்டம் வென்றுள்ளனர்.

தற்போது இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீர்ர் ராகுல் டிராவிட் இருவரையும் புகழ்ந்துள்ளார்.

அவர் இதுகுறித்து கூறுகையில், அமெரிக்க ஓபனில் இருவரும் சம்பியன் பட்டம் வென்றது வியத்தகு சாதனை என்று நான் நினைக்கிறேன்.

இருவரும் டென்னிஸ் விரும்பிகள் மட்டுமல்லாமல், அனைத்து விளையாட்டு வீரர்களுக்கும் மிகப்பெரிய உந்து சக்தியாக திகழ்கிறார்கள்.

லியாண்டர் பயஸ் இந்த வயதில் சாதனை படைத்திருப்பது மகத்தானது. இது காலத்திற்கும் நிலைத்து நற்கும் என்று தெரிவித்துள்ளார்.

SHARE