Drone எனப்படும் சிறிய ரக விமானத்தின் கண்டுபிடிப்பானது பல்வேறு துறைகளிலும் புரட்சியை ஏற்படுத்தியிருந்த நிலையில் தற்போது உலகின் மிகச்சிறிய Drone விமானம் உருவாக்கப்பட்டுள்ளது.
2.2 சென்ரி மீற்றர் நீளம், 2.2 சென்ரி மீற்றர் அகலம் கொண்ட இந்த விமானத்தினை TRNDlabs நிறுவனம் வடிவமைத்துள்ளது.
இரவு நேரங்களிலும் பறப்பில் ஈடுபடக்கூடிய வகையில் இவ் விமானத்தில் LED மின்கலங்கள் பொருத்தப்பட்டுள்ளது.
மேலும் 49 டொலர்கள் பெறுமதியான இந்த விமானத்தினைப் பயன்படுத்தி எந்தவொரு குறுகிய இடத்திலும் ஆய்வுகளை மேற்கொள்ளக்கூடியதாக இருப்பதுடன் கரணம் மற்றும் சுழற்சிகளை மேற்கொள்ளக்கூடிய வகையிலும் இவ் விமானம் வடிவமைக்கப்பட்டுள்ளது. |