மத்தளையில் தரையிறங்கிய ஸ்ரீலங்கன் விமானம்: மீண்டும் ஆரம்பிக்குமா விமானப் போக்குவரத்து?

313
மத்தளை மஹிந்த ராஜபக்ஷ சர்வதேச விமான நிலையத்தில் இன்று ஸ்ரீ லங்கன் விமானம் ஒன்று தரையிறக்கப்பட்டுள்ளது.

மிக நீண்டநாட்களாக மத்தளை விமான நிலையத்துக்கு விமானங்கள் வருகை தரவில்லை என்ற காரணத்தை முன்னிட்டு அந்த விமான நிலையத்தை மூடிவிட தேசிய அரசாங்கம் முடிவெடுத்திருந்தது.

அத்துடன் விமான நிலையத்தின் விமானப் பொதிகள் களஞ்சியத் தொகுதியை நெல் களஞ்சியப்படுத்துவதற்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றது.

இந்நிலையில் மிக நீண்ட நாட்களின் பின் ஸ்ரீ லங்கன் விமானம் ஒன்று இன்று மத்தளையில் தரையிறங்கியுள்ளது.

லண்டனிலிருந்து கட்டுநாயக்க விமான நிலையத்தை நோக்கி வந்து கொண்டிருந்த இந்த விமானம் மத்தளையில் தரையிறக்கப்பட்டதற்கான காரணம் இதுவரை தெரிவிக்கப்படவில்லை.

SHARE