10 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் மலையகப் பிரதிநிதிகள் பெயர் பிரேரிப்பு! தமிழ் முற்போக்குக் கூட்டணி நடவடிக்கை 

300

அரசமைப்பின் 19ஆவது திருத்தச்சட்டத்தின் பிரகாரம் அமைக்கப்படவுள்ள பொலிஸ் ஆணைக்குழு, தேர்தல் ஆணைக்குழு, மனித உரிமைகள் ஆணைக்குழு உட்பட 10 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் மலையகப் பிரதிநிதிகளின் பெயர்களைத் தமிழ் முற்போக்குக் கூட்டணி பிரேரிக்கவுள்ளது. இதுவிடயத்தைக் கையாள்வதற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் பொதுச்செயலாளர் லோரன்ஸ் தலைமையில் மூவரடங்கிய குழுவொன்று அமைக்கப்படவுள்ளது. தேர்தலுக்குப் பிறகு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் முதலாவது கூட்டம் நேற்று முன்தினம் கொழும்பு பம்பலப்பிட்டியில் நடைபெற்றது. இதன்போது சககால அரசியல் நிலைவரங்கள் தொடர்பாக விரிவுவாக ஆராயப்பட்டுள்ளன. அதில் குறிப்பாக, அரசமைப்புப் பேரவைக்கு மலையகப் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாமை குறித்துப் பேசப்பட்டுள்ளது. அரசமைப்புப் பேரவைக்கு மலையகப் பிரதிநிதிகள் உள்வாங்கப்படாததால், அமையவுள்ள சுயாதீன ஆணைக்குழுக்களுக்கு மலையகப் பிரதிநிதிகளை அரசு உள்வாங்கவுள்ளது. இதற்கமைய 10 சுயாதீன ஆணைக்குழுக்களுக்கும் மலையகப் பிரதிநிதிகளின் பெயர்கள் பரிந்துரைக்கப்படவுள்ளன. எதிர்வரும் 21ஆம் திகதிக்கு முன்னர் பெயர்களை அனுப்பிவைக்கப்பட வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது. இதேவேளை, தமிழ் முற்போக்குக் கூட்டணியிலுள்ள இரண்டு அமைச்சரவை அந்தஸ்துள்ள அமைச்சர்களும், ஒரு இராஜாங்க அமைச்சரும் கூட்டாக இணைந்து செயற்பட்டு மலையக மக்களின் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணுவது தொடர்பில் இங்கு ஆராயப்பட்டுள்ளது. – See more at:

SHARE