பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் களமிறங்கும் சங்கக்காரா, கிறிஸ் கெய்ல்

321

பாகிஸ்தான் சூப்பர் லீக் டி20 தொடரில் குமார் சங்கக்காரா, கிறிஸ் கெய்ல் ஆகியோர் விளையாடவிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் பாகிஸ்தான் சூப்பர் லீக் என்ற பெயரில் டி20 தொடரை கத்தாரில் உள்ள தோஹாவில் பெப்ரவரி 4 முதல் 24ம் திகதி வரை நடத்துகிறது.

இதற்கான அனைத்து வேலைகளையும் பாகிஸ்தான் கிரிக்கெட் வாரியம் செய்து வருகிறது. உலகில் உள்ள பிரபலமான வீரர்களை ஒப்பந்தம் செய்யும் வேலையும் தீவிரமான நடந்து வருகிறது.

இந்நிலையில் மேற்கிந்திய தீவுகளின் அதிரடி வீரர் கிறிஸ் கெய்ல் பாகிஸ்தான் சூப்பர் லீக்கில் பங்கேற்க இருப்பதாக பாகிஸ்தான் கிரிக்கெட் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

அவர் இந்த லீக் போட்டியில் விளையாடுவதை பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடருக்கான செயலாளர்களின் தலைவர் நஜம் சேதி உறுதிப்படுத்தியுள்ளார்.

இது தொடர்பாக அவர் கூறுகையில், ”பாகிஸ்தான் சூப்பர் லீக் தொடரில் கிறிஸ் கெய்ல் விளையாட சம்மதம் தெரிவித்திருப்பது மிகுந்த மகிழ்ச்சி அளிக்கிறது” என்று தெரிவித்துள்ளார்.

அதே போல் இலங்கை அணியின் முன்னாள் தலைவர் சங்கக்காரா, இங்கிலாந்து அணியின் முன்னாள் தலைவர் பீட்டர்சன் ஆகியோருடனான ஒப்பந்த பேச்சுவார்த்தை முடியும் நிலையில் இருப்பதாக

SHARE