வவுனியாவில் வைத்தியசாலை சுத்திகரிப்பு தொழிலாளர்கள்
ஆர்ப்பாட்டம்
வவுனியா பொது வைத்தியசாலை ஒப்பந்த சுகாதார சுத்திகரிப்பு
ஊழியர்கள் தங்களை பணிநீக்கம் செய்வதை கண்டித்தும் தங்களுக்கு நியமனம்
அல்லது பணி நீடிப்பு வழங்க கோரியும் இன்று 16-09-2015
ஆர்ப்பாட்டம் ஒன்றில் ஈடுபட்டனர்.
கடந்த 2002 இருந்து ஒப்பந்த அடிப்படையில் சுகாதார சுத்திகரிப்பு
தொழிலாளர்களாக பணிபுரிந்து வரும் 45 தொழிலாளர்களில் 25 பேரை
பணிநீக்கம் செய்ய நிர்வாகம் நடவடிக்கை எடுத்திருப்பதால் சுத்திகரிப்பு
தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
சம்பவ இடத்திற்கு சென்றிருந்த வன்னி பாராளுமன்ற உறுப்பினர்
சிவசக்தி ஆனந்தன் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் பிரச்சனைகளை கேட்டு
தெரிந்துகொண்டதுடன் அதற்கான நடவடிக்கைகளை உடனடியாக எடுப்பதாக
வாக்குறுதி வழங்கினார்.
வடமாகாணசபை உறுப்பினர்களான தியாகராஜா மற்றும் இந்திரராஜா
ஆகியோரும் சுத்திகரிப்பு தொழிலாளர்களின் பிரச்சனைகளை
கேட்டறிந்து கொண்டனர்