சர்வதேச பாடசாலை மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் உயர்தரப் பரீட்சைக்குத் தோற்ற முடியாது

561

சர்வதேச பாடசாலைகளின் மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் உயர்கல்வி கற்க அனுமதிக்கப்படுவதனால், ஏனைய பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர்.

எனவே சர்வதேச பாடசாலைகளில் சாதாரண தரப் பரீட்சையில் சித்தியெய்தும் மாணவர்கள், இனி வரும் காலங்களில் தேசிய பாடசாலைகளில் உயர்தரத்திற்கு விண்ணப்பிக்க முடியாது.
இது தொடர்பில் தேசிய பாடசாலைகளின் அதிபர்ளுக்கு ஏற்கனவே அறிவிக்கப்பட்டுள்ளது.

சர்வதேச பாடசாலைகளைச் சேர்ந்த அதிகளவான மாணவர்கள் தேசிய பாடசாலைகளில் சேர்வதனால், சாதாரண பாடசாலை மாணவர்கள் பாதிக்கப்படுகின்றனர். இந்த நிலைமையை கருத்திற் கொண்டு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என கல்விஅமைச்சர் அண்மையில்  குறிப்பிட்டுள்ளார்.

SHARE