உலகின் பல பகுதிகளிலும் வியாபித்திருக்கும் கூகுள் ஆனது தொடர்ந்தும் தனது சேவை எல்லைகளை அதிகரித்துவருகின்றது.
தவிர வேறு பல நிறுவனங்களுடனும் இணைந்து தனது சேவையை விஸ்தரித்துவருகின்றது.
இவற்றின் ஒரு பகுதியாக தற்போது இந்தியாவின் ரயில்வே திணைக்களத்துடன் இணைந்து சுமார் 400 இடங்களில் முற்றிலும் இலவசமான முறையில் Wi-Fi இணைய இணைப்பினை வழங்க முன்வந்துள்ளது.
1,000 Mbps வேகம் கொண்ட இவ் இணைப்புக்கள் அனைத்தும் புகையிரத நிலையங்களில் வழங்கப்படவுள்ளது.
இவ் வேகமானது சாதாரண இணைய இணைப்புக்களை விடவும் 10 மடங்கு வேகம் உடையதாகும்.
இதன் ஊடாக நாளாந்தம் புகையிரதத்தில் பயணம் செய்யும் சுமார் 20 மில்லியன் மக்கள் பயன்பெறுவர் என தெரிவிக்கப்பட்டுள்ளது.