நம் மீது யாராவது கோபம்கொண்டால்,நாம் நேரடியாக அவரைக் குற்றம் சொல்லாமல் ‘நம் மீது அவன் கோபம் அடைய,நாம் அவனுக்கு என்ன செய்தோம்.அவன் ஏன் நம் மீது மட்டும் கோபப்படுகிறான்?மற்றவர்களிடம் நல்ல முறையில் தானே நடந்து கொள்கிறான்!’என்று எண்ணி அதற்கான காரணத்தை உங்களிடமே கண்டு பிடிக்க முயலுங்கள்.அடுத்து நீங்கள் அவனிடம் நேரடியாக,’நீ என் மீது கோபம் அடையக் காரணம் என்ன?உன் மனதைப் புண்படுத்தும்படி நான் என்ன செய்தேன்?நான் எந்தத் தீங்கும் உனக்கு செய்யவில்லை.உன் கோபத்திற்கு வேறு ஏதேனும் காரணம்இருக்க வேண்டும்.’என்று நட்பாகக் கேட்கவும்.உடனே அவன் கண்களில் நீர் மல்க உங்களிடம் மன்னிப்புக் கேட்கலாம்.
ஜார்ஜ் குருட்ஜிவ் ஒன்பது வயது சிறுவனாக இருந்தபோது அவருடைய தந்தை ஒரு எளிய அறிவுரையைக் கூறினார்.”யாராவது உன் மேல் கோபம் கொண்டால்,அதற்கு பதிலாக உடனே எதுவும் செய்யாதே.உடனே பதிலுக்கு சண்டை போடாதே.அவன் சொல்வதைக் கவனமாகக் கேள். பிறகு அவனிடம்,’நான் நீங்கள் கூறியவற்றைப் பற்றி சிந்திக்க எனக்கு 24 மணி நேர அவகாசம் கொடுங்கள்.பிறகு தகுந்த பதிலை உங்களுக்கு சொல்கிறேன்,’என்று கூறவும்.”குருட்ஜீவ் கூறுகிறார்,”இந்த அறிவுரைஎன் முழு வாழ்க்கையையும் மாற்றி விட்டது.ஏனெனில் சில சமயம் பிறருடைய கோபம் என்னை ஒன்றும் செய்வதில்லைஎன்பதனை உணர்ந்தேன்.நான் அதற்கு உடனடியாக பதில் சொல்லத் தேவையில்லை.
ஏனெனில் அது என்னைக் குறித்து சொல்லப்பட்டதாக நான் நினைக்கவில்லை.நான் அவர் அருகில் இருப்பதே,அவர் கோபம் என் மீது பாயக் காரணமாகி விட்டது என்று நினைக்கிறேன்.அப்படியே நான் செய்தது தவறு என்று மனப்பூர்வமாக உணர்ந்தால்,அவரிடம் சென்று நேரடியாக,’என்னை மன்னித்துக் கொள்ளுங்கள்,’என்று கூறுகிறேன்.இது எனக்கு மன ஆறுதலாக இருக்கிறது. நான் சொன்னதுபோல 24 மணி நேரத்தில் மீண்டும் வரவில்லை என்றால் அது என்னைக் குறித்த கோபம் அல்ல என்று அவர்கள் புரிந்து கொண்டார்கள் என்று பொருள்.”