உப்பு கருவாடு இசையை வாங்கிய சோனி நிறுவனம்

337

இயக்குனர் ராதாமோகனின் உப்பு கருவாடு படத்தின் இசை உரிமையை சோனி நிறுவனம் வாங்கியுள்ளது.

உப்பு கருவாடு படம் முடிந்து அதன் டீஸரை ஜோ‌திகா வெளியிட்டார். அதன் பிறகு படம் குறித்து சேதியில்லை. கருவாடை இப்படி காயப்போட்டுவிட்டார்களே என்று யோசித்த நேரம், ” விரைவில் பாடல்களை வெளியிடப் போவதாக அறிவிப்பு வந்திருக்கிறது” தயாரிப்பாளர் ராம்ஜியிடமிருந்து.

“படத்தின் பாடல்களுக்கு நிச்சயம் பெரும் வரவேற்பு இருக்கும். விரைவில் இசை வெளியீட்டு விழா நடக்க உள்ளது. அதை அடுத்து படம் ரிலீஸ் பணிகளில் ஈடுப்பட்டு வருகிறோம்.

திரை உலகில் இந்தப் படத்துக்கு கிடைத்து வரும் வரவேற்பு நிச்சயம் படத்தின் வெற்றியில் பிரதிபலிக்கும்” என்றார்.

பிரபல கிடார் கலைஞர் ஸ்டீவ் வாட்ஸ் உப்பு கருவாடு படத்துக்கு இசையமைக்க, மதன் கார்க்கி பாடல்கள் எழுதியுள்ளார்.

SHARE