டில்ஷானின் மனைவியை மணந்த உபுல் தரங்கா! சிக்கலான திருமண வாழ்க்கை

360

இலங்கை கிரிக்கெட் அணியின் அதிரடி தொடக்க வீரரான டில்ஷானின் குடும்ப வாழ்க்கையில் பல சூறாவளி வீசி இருக்கிறது.

டில்ஷான் கலுத்தராவில் ஒக்டோபர் 14,1976ம் ஆண்டு பிறந்தார். இவருடைய தந்தை மலாய், தாய் சிங்களம்.

சிறுவயதிலே துடிப்பான டில்ஷான் கிரிக்கெட் பக்கம் காலடி பதிக்க ஆரம்பித்து விட்டார்.

ஆரம்பத்தில் முஸ்லீமாக இருந்த இவர் தனது 16வது புத்த மதத்தால் ஈர்க்கப்பட்டு மதம் மாறினார்.

இருப்பினும் துவான் முகமது டில்ஷான் என்ற பெயரை தனது பயிற்சியாளரின் அறிவுரையால் மாற்றிக் கொள்ளவில்லை.

பெரிய சோகமாக திடீரென்று அவரின் பெற்றோர்கள் பிரிந்து சென்றுவிட்டனர். இந்நிலையில் தனது பெயரை டில்ஷான் என்று அதிகாரப்பூர்வமாக மாற்றிக் கொண்டார்.

இதன் பிறகு கிரிக்கெட்டில் கவனம் செலுத்த ஆரம்பித்த டில்ஷான் இலங்கை அணியில் அசத்த தொடங்கினார்.

இவர் நிலாங்கா விதானகே என்பவரை திருமணம் செய்துக் கொண்டார். இவர்களுக்கு ஒரு மகன் உள்ளார்.

இந்நிலையில் இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட இருவரும் விவாகரத்து பெற்றுக் கொண்டனர்.

விவாகரத்துக்கு பின்னர் நிலாங்கா விதானகே தனது மகனின் எதிர்கால நலன் கருதி மாத ஜீவனாம்சம் கோரி வழக்கு தொடர்ந்தார்.

இது தொடர்பாக 2011ம் ஆண்டு நீதிமன்றம் டில்ஷானை நேரில் ஆஜராகுமாறு நோட்டீஸ் அனுப்பியது.

ஆனால் டில்ஷான் அதை எல்லாம் புறக்கணித்து விட்டார். தற்போது அவர் மாதம் 2 லட்சம் ரூபாய் மனைவிக்கும் மகனுக்கும் கொடுக்க ஒப்புக் கொண்டுள்ளார்.

தற்போது நிலாங்கா விதானகே மற்றொரு இலங்கை கிரிக்கெட் வீரரான உபுல் தரங்காவை மணந்திருக்கிறார்.

இதைத் தொடர்ந்து டில்ஷான் தொலைக்காட்சி நடிகை மஞ்சுளா திலினி என்பவரை இரண்டாவதாக மணந்துள்ளார்.

2008ம் ஆண்டு ஐபிஎல் தொடரின் போது இவர்களது திருமண விழா கொண்டாடப்பட்டது. இவர் மூலம் டில்ஷானுக்கு ஒரு மகன், 2 மகள்கள் உள்ளனர்.

குடும்ப வாழ்க்கையில் பல பிரச்சனைகள் வந்த போதும் இலங்கை அணிக்கு சிறந்த பங்களிப்பு அளித்த டில்ஷான் தற்போது ஓய்வு பெறும் தருவாயில் இருக்கிறார்.

SHARE