8 காட்சிகளா? வியப்பில் ஆழ்த்தும் புலியின் மாபெரும் சாதனை

295

சிம்புதேவன் இயக்கத்தில் விஜய், ஸ்ரீதேவி, ஸ்ருதிஹாசன், ஹன்சிகா, சுதீப் என ஒரு நட்சத்திர பட்டாளமே நடித்து மிக பிரமாண்டமாக உருவான படம் புலி.

புலி என பெயரைக் கேட்டாலே விஜய் ரசிகர்கள் டிரெண்ட் செய்து சாதனையாக்கி விடுகின்றனர்.

இதன் டிரெய்லர், புரோமோ, பாடல் படைத்த சாதனை அனைவருக்கும் தெரிந்ததே. மேலும் படக்குழு எதிர்பார்த்தது போலவே படத்திற்கு யு சான்றிதழ் கிடைத்துள்ளது. இந்தியாவில் இதுவரை எந்த ஒரு படமும் ஒரே நாளில் 8 காட்சிகள் திரையிடப்பட்டதில்லை.

 

ஆனால் புலி படம் மட்டும் தமிழ்நாடு மற்றும் கேரளாவிலுள்ள சில திரையரங்கில் முதல் இரண்டு நாட்களுக்கு 8 காட்சிகள் திரையிட முடிவு செய்துள்ளனர். இதன்படி நடந்தால் இந்தியாவிலேயே முதன்முறையாக 8 காட்சிகள் வெளியான முதல் திரைப்படம் என்ற சாதனையை படைக்கும்.

SHARE