நீரிழிவு நோயைக் குணப்படுத்தும் மாத்திரை வெற்றிகரமாக பரிசோதிப்பு……..

388

இன்சுலின் அளவில் தங்கியிருக்கும் டைப் 1 (Type 1) நீரிழிவு நோயினைக் குணப்படுத்தக்கூடிய புதிய மாத்திரையானது எலிகளில் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டுள்ளது.

இப்பரிசோதனை அமெரிக்க ஆய்வாளர்களால் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

சுயமான நோய் எதிர்ப்பு சக்தியை பாதிக்கும் இந்த நோயானது குழந்தைகள் முதல் இளம் பருவத்தினரை தாக்குவதுடன், குறித்த மாத்திரையானது சொந்த நோய் எதிர்ப்பு சக்தியை உடைய கலங்களை வளர்க்கக்கூடிய வகையில் தயாரிக்கப்பட்டுள்ளது.

மேலும் இவ் வகை நீரிழிவு நோய்க்கு உள்ளானவர்களில் 90 சதவீதமானவர்களின் ஈரலில் உள்ள பீட்டா கலங்கள் அழிக்கப்படுவதாகவும் குறித்த ஆராய்ச்சிக் குழுவில் அங்கம் வகித்த Paul Bollyky என்பவர் தெரிவித்துள்ளார்.

நீரிழிவு நோய்க்கு ஆளானவர்களில் 5 சதவீதமானவர்கள் டைப் 1 நீரிழிவு நோயை உடையவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

SHARE