பந்துவீச்சில் மிரட்டிய நசீர், ருபெல்: இந்திய ‘ஏ’ அணிக்கு பதிலடி கொடுத்தது வங்கதேச ‘ஏ’ அணி

360
இந்தியா- வங்கதேச ‘ஏ’ அணிகளுக்கு இடையிலான 2வது ஒருநாள் போட்டி இன்று நடைபெற்றது.இதில் முதலில் துடுப்பெடுத்தாடிய வங்கதேச ‘ஏ’ அணி 50 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட்டுக்கு 252 ஓட்டங்கள் எடுத்தது. இதில் நசீர் ஹொசன் சதம் (102) அடித்தார்.

இந்தியா ‘ஏ’ சார்பில் பந்துவீச்சில் ரிஷி தவான் 3 விக்கெட்டும், கரண் சர்மா 2 விக்கெட்டும் வீழ்த்தினார்கள்.

பின்னர் 253 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய இந்திய ‘ஏ’ அணி நசீர் ஹொசன், ருபெல் ஹொசன் பந்துவீச்சில் சரணடைந்தது.

இதனால் இந்திய ‘ஏ’ அணி 42.2 ஓவரில் 187 ஓட்டங்களில் சுருண்டது. இதனால் வங்கதேச ‘ஏ’ அணி 65 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இந்திய ‘ஏ’ வீரர்கள் ரெய்னா (17), நாயர் (4), சாம்சன் (0), ரிஷி தவான் (0), கரண் சர்மா (2), கலேரியா (5) ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் வெளியேறினர். குர்கீரத் சிங் மட்டும் 34 ஓட்டங்கள் சேர்த்தார்.

வங்கதேச ‘ஏ’ அணி சார்பில், நசீர் ஹொசன் 5, ருபெல் ஹொசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் மூன்று போட்டிகள் கொண்ட தொடரை 1-1 என சமநிலை செய்துள்ளது வங்கதேசம்.

கடைசி மற்றும் 3வது ஒருநாள் போட்டி வரும் ஞாயிற்றுக் கிழமை நடக்கிறது.

SHARE