கூகுள் நிறுவனம் Android One எனும் மொபைல் சாதனத்தை வடிவமைத்து வந்தமை அறிந்ததே. இந்நிலையில் இச் சாதனத்தினை முதன் முறையாக ஐரோப்பிய நாடுகளான ஸ்பெயின், போர்த்துக்கலில் அறிமுகம் செய்துள்ளது.Aquaris A4.5 எனப்படும் இக் கைப்பேசியானது 4.5 அங்குல அளவு, 540 x 960 Pixel Resolution உடைய IPS தொடுதிரையினைக் கொண்டுள்ளது. மேலும் இதில் 1GHz வேகத்தில் செயலாற்றக்கூடிய MediaTek MT6735M Processor, பிரதான நினைவகமாக 1GB RAM, 16GB சேமிப்பு நினைவகம், 8 மெகாபிக்சல்களை உடைய கமெரா என்பன தரப்பட்டுள்ளன. கூகுள் பிளே மியூசிக்கினை 3 மாதங்களுக்கு இலவசமாகப் பயன்படுத்தக்கூடியதாக விற்பனை செய்யப்படுகின்றது. இதன் விலையானது ஸ்பெயினில் 169.90 பவுண்ட்ஸ் ஆகவும், போர்த்துக்கலில் 179.90 பவுண்ட்ஸ்களாகவும் காணப்படுகின்றது. |