தூங்கிக்கொண்டிருந்த சிறுமியை தூக்கி செல்வதற்கு முயன்ற சம்பவமொன்று ஹம்பாந்தோட்டை, புந்தல பிரதேசத்தில் இடம்பெற்றுள்ளது.
இன்று திங்கட்கிழமை அதிகாலை 1.30 மணியளவிலேயே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது. துஷ்பிரயோகத்துக்கு உட்படுத்தும் நோக்கிலேயே சிறுமியை தூக்கி செல்வதற்கு முயன்றிருக்கலாம் என்றும் தெரிவிக்கப்படுகின்றது.
வீட்டிலிருந்தவர்கள் விழித்துகொண்டதையடுத்து சந்தேகநபர் தப்பியோடிவிட்டதாகவும் அவரை தேடிஇ ஹம்பாந்தோட்டை மற்றும் திஸ்ஸமஹாராம பொலிஸார் இணைந்து தேடுதலை நடத்திவருவதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.