தமிழ் சினிமா நடிகர்களில் கமல்ஹாசன் ரசிகர்கள் என்றால் எல்லோருக்கும் ஒருவித மரியாதை உள்ளது. ஏனெனில் ரசிகர் மன்றங்களை நற்பணி மன்றங்களாக மாற்றியது மட்டுமில்லாமல், மற்ற ரசிகர்களுக்கு முன் உதாரணமாக பல நலத்திட்ட உதவிகளை செய்தனர்.
ஆனால், கமல் ரசிகர் ஒருவர் தான் நேற்று சிவகார்த்திகேயனை தாக்கினார் என்று செய்தி அனைவரையும் வருத்தத்தில் ஆழ்த்தியது. இதுக்குறித்து கமலிடம் கேட்டபோது ‘அதெல்லாம் ஒன்றுமில்லை, அவர் நன்றாக தான் இருக்கிறார்’ என கூறினார் அந்த இடத்திலிருந்து நகர்ந்தார்.
பிறகு சென்னை வந்து இறங்கிய அடுத்த நிமிடம் ’சிவகார்த்திகேயனைத் தாக்க முற்பட்டது யார்? என்பதை உடனடியாக விசாரித்து என்னிடம் சொல்லுங்கள்’ என்று கடுமையாக உத்தரவிட்டாராம்.