இந்தியாவின் நட்சத்திர டென்னிஸ் வீராங்கனை சானியா மிர்சாவுக்கு மும்பையில் உள்ள ‘கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியாவில்’ வாழ்நாள் உறுப்பினர் கவுரவம் வழங்கப்பட்டுள்ளது.இவர் சமீபத்தில் சுவிட்சர்லாந்தின் மார்டினா ஹிங்கிசுடன் இணைந்து அமெரிக்க ஓபனில் பட்டம் வென்று அசத்தினார். மேலும், டென்னிசில் தொடர்ந்து ஜொலித்து வருகிறார்.
இந்நிலையில் ‘கிரிக்கெட் கிளப் ஆப் இந்தியாவில்’ வாழ்நாள் உறுப்பினர் கவுரவம் பெற்ற சானியா பேசுகையில், “எனது ரத்தத்திலே கிரிக்கெட் கலந்துள்ளது.
எனது கணவரான சோயப் மாலிக் ஒரு கிரிக்கெட் வீரர். தவிர, எனது குடும்ப உறுப்பினர்கள் அனைவரும் கிரிக்கெட் விளையாடுவர்.
அது மட்டுமல்லாது எனது மாமா ரஞ்சி கிண்ணப் போட்டிகளில் பங்கேற்றுள்ளார்” என்று தெரிவித்துள்ளார்.
மேலும், “டென்னிசில் இரட்டையர் பிரிவில் மட்டும் பங்கேற்பது உடல் அளவில் மட்டும் எளிதானது. ஆனால் மனதளவில் கடினமானது” என்றும் அவர் கூறியுள்ளார்.
|