ஹர்பஜனுக்கு கிடைத்த அடுத்த வாய்ப்பு: உலகக்கிண்ண டி20 அணியில் இடம்பிடிப்பாரா?

349
தென் ஆப்பிரிக்க அணிக்கு எதிராக விளையாடும் இந்திய டி20 மற்றும் ஒருநாள் அணி நேற்று அறிவிக்கப்பட்டது.இதில் முன்னணி சுழற்பந்து வீச்சாளரான ஹர்பஜன் சிங்கிற்கு டி20 அணியில் வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது.

முன்னதாக அணியில் நீண்ட காலமாக இடம் கிடைக்காமல் தவித்து வந்த ஹர்பஜன் சிங்கிற்கு வங்கதேச அணிக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் விளையாட வாய்ப்பு கிடைத்தது.

தொடர்ந்து இலங்கை அணிக்கு எதிரான டெஸ்ட் தொடரில் மூன்று சுழற்பந்து வீச்சாளர்களை கொண்டு களமிறங்கிய இந்திய அணியில் அஸ்வின், மிஸ்ராவுடன், ஹர்பஜன் சிங்கும் இடம்பெற்றார்.

ஆனால் அவரது சுழற்பந்து எடுபடாத நிலையில், பாதியில் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கப்பட்டார். இதனால் அவரின் சர்வதேச கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துவிட்டது என்று கூறப்பட்டது.

இந்நிலையில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டி20 தொடரில் ஹர்பஜன் சிங்கிற்கு மீண்டும் வாய்ப்பளிக்கப்பட்டுள்ளது.

மேலும், இந்த தொடரில் ஹர்பஜன் சிங் சிறப்பாக செயல்பட்டால் அடுத்த வருடம் நடைபெற இருக்கும் டி20 உலகக்கிண்ணத் தொடரில் இடம் கிடைக்க வாய்ப்பு இருக்கிறது.

SHARE