உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஐ.தே.க , சுதந்திரக் கட்சிக்கு இடையில் மாறுபட்ட நிலைப்பாடு

278

உள்ளுராட்சி மன்றத் தேர்தல் தொடர்பில் ஐக்கிய தேசியக் கட்சி மற்றும் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி ஆகியனவற்றுக்கு இடையில் மாறுபட்ட நிலைப்பாடு காணப்படுவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
தேர்தலை எவ்வாறு நடாத்துவது மற்றும் தேர்தலை எப்போது நடாத்துவது என்பன தொடர்பில் இரண்டு பிரதான கட்சிகளும் முண்பட்ட நிலைப்பாட்டைக் கொண்டிருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது.தற்போது அமுலில் உள்ள விருப்பத் தெரிவு முறையில் தேர்தலை நடத்த வேண்டுமென ஐக்கிய தேசியக் கட்சி வலியுறுத்தி வருகின்றது.
மஹிந்த ராஜபக்ஸ ஆட்சிக் கால எல்லை நிர்ணய நடவடிக்கைகளில் பல்வேறு குறைபாடுகள் காணப்படுவதாக கட்சி சுட்டிக்காட்யுள்ளது.இந்தக் குறைகளை நிவர்த்தி செய்யாது தேர்தல் நடாத்துவது கட்சிக்கு பாதக நிலைமையை ஏற்படுது;தும் என தெரிவித்துள்ளது.
எல்லை நிர்ணயம் பக்கச்சார்பான முறையில் மேற்கொள்ளப்பட்டுள்ள காரணத்தினால், மீளவும் எல்லை நிர்ணயத்தில் திருத்தங்கள் செய்யப்பட வேண்டும் என கல்வி அமைச்சர் அகில விராஜ் காரியவசம் தெரிவித்துள்ளார்.
கடந்த அரசாங்கத்திற்கு சாதகத்தன்மைய ஏற்படுத்தும் வகையில் எல்லை நிர்ணயம் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் , ஐக்கிய தேசியக் கட்சிக்கு பாதக நிலைமை ஏற்படும் எனவும் பிரதமர் ரணில் விக்ரமசிங்கவும் சுட்டிக்காட்டியுள்ளார்.
நேற்றைய தினம் நடைபெற்ற கட்சியின் செயற்குழுக் கூட்டத்திலும் இது பற்றி பேசப்பட்டுள்ளது.இதேவேளை, தொகுதிவாரி மற்றும் விகிதாசார அடிப்படையில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல் நடத்தப்பட வேண்டுமென ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சி கோரி வருகின்றது.
எல்லை நிர்ணயத்தில் ஏதேனும் குறைபாடுகள் காணப்பட்டால் அவற்றை நிவர்த்தி செய்து அதன் பின்னர் கலப்பு முறையில் தேர்தல் நடத்தப்பட முடியும் என கட்சி அறிவித்துள்ளது. எதிர்வரும் மார்ச் மாதமளவில் உள்ளுராட்சி மன்றத் தேர்தல்களை நடாத்த திட்டமிடப்பட்டுள்ளது.

SHARE