பாகுபலி படம் வந்து ரொம்ப நாட்களாகி விட்டது. தியேட்டரிலிருந்தும் போய் விட்டது. இப்போது அதைப் பற்றி பேச என்ன உள்ளது. புலியைப் பற்றி மட்டும் என்னிடம் கேளுங்கள் என்று கூறியுள்ளார் நடிகை ஸ்ரீதேவி. புலி படம் தொடர்பாக தீவிர புரமோஷனில் ஈடுபட்டுள்ளார் ஸ்ரீதேவி. தனது சமூக வலைதளப் பக்கங்களை புலி குறித்த செய்திகளைப் போட்டு அசத்திக் கொண்டிருக்கிறார். இந்த நிலையில்தான் பாகுபலி குறித்து அவரிடம் கேட்கப்பட்டபோது எரிச்சல் காட்டியுள்ளார் ஸ்ரீதேவி. இதற்குக் காரணம் உள்ளது.