2020 ஆண்டு முதல் 2030 வரை சூரியன் வேலை செய்யாது: பீதியை கிளப்பும் விஞ்ஞானிகள்……..

415

எதிர்வரும் 2020 ஆண்டு முதல் 2030 வரை சூரியனில் இருந்து வரும் கதிர்களில் அளவுகள் குறையக்கூடும் என்று விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.

கடந்த 1645ம் ஆண்டு முதல் 1715ம் ஆண்டு வரை சூரியனில் இருந்து வரும் கதிர்களின் தாக்கம் குறைந்ததால் பூமியில் கடும் குளிர் நிலவியது.

இதன் காரணமாக லண்டனின் தேம்ஸ் நதிகூட முழுமையாக உறைந்திருந்ததாக கூறப்படுகிறது.

இந்நிலையில் வரும் 2020 முதல் 2030 வரை மீண்டும் இதேபோல் ஒரு நிலை ஏற்படக்கூடும் என்று விஞ்ஞானிகள் கணித்துள்ளனர்.

பிரித்தானியாவின் லெண்டுட்னொ பகுதியில் நடைபெற்ற தேசிய வானவியல் தொடர்பான கூட்டம் நடைபெற்றது.

இதில் கலந்து கொண்ட பேராசிரியர் வாலெண்டின ஷர்கோவா சமர்பித்துள்ள கட்டுரையில் கூறப்பட்டுள்ளதாவது, சூரியனின் கதிர்வீச்சில் 11 ஆண்டுகளுக்கு ஒரு முறை மாற்றம் ஏற்படுகிறது.

இந்நிலையில் வரும் 2020ம் ஆண்டு சூரியனின் கதிர் வீச்சு குறைய தொடங்கும். மீண்டும் உயராமல் சிறிய அளவிலேயே இது இருக்கக்கூடும்.

இதன் காரணமாக 2030ம் ஆண்டு சூரிய செயல்பாடுகளில் பெரிய தேக்கம் ஏற்படடும். இந்த நிலை 2030- 2040 வரை கூட தொடரக்கூடும்.

எனவே பூமியில் சூரியனின் கதிர்வீச்சுகள் இல்லாமால் குளிர் அதிகமாக இருக்கும். மீண்டும் கடும் குளிர்நிலைக்கு பூமி செல்ல வாய்ப்பிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

SHARE