உலகின் மிகவும் பாரம் குறைந்த உலோகம் உருவாக்கம் (வீடியோ இணைப்பு)

377
விஞ்ஞான வளர்ச்சியின் விளைவாக பல்வேறு வியத்தகு கண்டுபிடிப்புக்கள் நாள்தோறும் கண்டுபிடிக்கப்பட்டு வருகின்றன.இவற்றின் தொடர்ச்சியாக தற்போது உலகிலேயே மிகவும் பாரம் குறைந்த உலோகம் உருவாக்கப்பட்டுள்ளது.

Microlattice என அழைக்கப்படும் இந்த உலோகமானது முன்னர் கண்டுபிடிக்கப்பட்ட Styrofoam எனும் உலோகத்தினைவிட 100 மடங்கு பாரம் குறைந்ததாகும்.

இது 99.99 சதவீதம் வளி நிரம்பியதும், 100 நனோமீற்றர்கள் தடிப்பம் உடையதுமான சிறிய உலோக குழாய்களை இணைத்து உருவாக்கப்பட்டுள்ளது.

அதாவது இக் குழாய்கள் மனிதனின் தலை முடியின் தடிப்பை விடவும் 1000 மடங்கு மெல்லியதாக காணப்படுகின்றது.

இவ் வகை உலோகமானது எதிர்காலத்தில் விமானங்களில் அதிகளவில் பயன்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

SHARE