மட்டக்களப்பு மாவட்டத்தில் கடந்த சில தினங்களாக பெய்து வரும் அடை மழை காரணமாக ஏற்பட்ட வெள்ளப் பெருக்கினால் கிரான் – தொப்பிக்கல பிரதான வீதி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது.
வெள்ளப் பெருக்கு காரணமாக கிரான் பிரதேச செயலாளர் பிரிவில் உள்ள புலிபாந்தகல் மற்றும் தொப்பிகல பிரதேசங்களை அண்மித்த கிராமங்களுக்கான தரை வழிப் போக்குவரத்து முற்றாகத் துண்டிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து உடனடியாக படகுச் சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
கோறளைப் பற்று தெற்கு கிரான் பிரதேச செயலகம் மற்றும் இராணுவத்தினரினால் இரு படகுகள் சேவையில் ஈடுபடுத்தப்பட்டுள்ளன.
இரண்டாம் இணைப்பு
மட்டக்களப்பு தொப்பில பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கியது
மட்டக்களப்பு தொப்பிகல பிரதான வீதியும் வெள்ளத்தில் மூழ்கியது. இந்நிலையில் இராணுவத்தினரின் உதவியுடன் படகு சேவை ஆரம்பிக்கப்பட்டுள்ளது.