தேசியத்தலைவர் பிரபாகரனால் அமைக்கப்பட்ட பதுங்கு குழிகளில் 21 வருடங்கள் தங்கியிருக்கலாம்

440

உலகிலுள்ள வல்லரசு நாடுகள் பொதுவாக தமது பாதுகாப்பினை உறுதிப்படுத்தும் நோக்கில் நிலக்கீழ் பதுங்குகுழிகளை அமைப்பது என்பது வழமையானது. உலகில் பல பிரசித்திபெற்ற பதுங்கு குழிகள் இருக்கின்றன. அவை யாவன, எறும்பு பதுங்குகுழி, எலி பதுங்குகுழி, பாம்பு பதுங்குகுழி, சிலந்தி பதுங்குகுழி, மரம், கிணறு வடிவிலான பதுங்குகுழிகள் போன்றவற்றை உதாரணமாகக் குறிப்பிடலாம். ஒசாமா பின்லேடனின் தாக்குதலுக்குப் பின் அமெரிக்க அரசினால அமைக்கப்பட்ட பதுங்கு குழியே எறும்பு ஆகும். இதனது கட்டுமானப்பணிகளை மேற்கொண்ட பொறியியலாளர்கள் பலர் கட்டிமுடிக்கப்பட்ட பின்னர் கொலை செய்யப்பட்டார்கள் என்பதுதான் வரலாறு. இவ்வாறு பதுங்கு குழிகளை உருவாக்கும் நிர்மாணத்து றையினர் கொலை செய்யப்படுவது என்பது வழமையான விடயமாகவும் காணப்படுகின்றது. உலக நாடுகள் பல தமது பாதுகாப்பினை கவனத்திற்கொண்டு வௌ;வேறான வடிவங்களில் பதுங்கு குழிகளை அமைத்திருக்கின்றன. தமது படைகளையும், மருத்துவ வசதி களையும் பேணிப்பாதுகாப்பதற்காக காட்டின் நடுப்பகுதிகளில் இவ்வாறான பதுங்குகுழிகள் அமைக்கப்படுவது இயல்பு.

தமிழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்களும் பதுங்கு குழிகளை நிர்மாணித்திருந்ததாகக் கூறப்படுகின்றது. எறும்பு, எலி, சிலந்தி ஆகிய பதுங்குகுழிகளே அவை யாகும். இந்த மூன்று பதுங்குகுழிகளும் இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. இப்பதுங்குகுழிகளானவை கண்டுபிடிக்கும் விதத்திலும் அமைக்கப்படவில்லை. 07 வகையான பதுங்கு குழிகள் காணப்படுகின்றன. அவற்றுள் ஏழாவது வகையே இந்த சிலந்தி அமைப்பாகும். இதில்தான் தூக்கிலிடப்பட்ட ஈராக்கின் மறைந்த முன்னாள் ஜனாதிபதி சதாம் ஹூசைன் அவர்கள் மறைந்தி ருந்ததாகவும், அதிலிருந்தே அவர் பிடிக்கப்பட்டார் எனவும் கூறப்படுகிறது.

அதேபோன்றதான ஒரு பதுங்கு குழியினையே பிரபாகரன் அவர்களும் அமைத்திருந்தார். ஆனால் அது இதுவரையில் கண்டுபிடிக்கப்படவில்லை. பிரான்ஸ் அரசே சதாம் ஹூசைன் அவர்களுக்கு பதுங்கு குழியினை அமைத்துக்கொடுத்தது. சதாம் ஹூசைனின் விசுவாசப் படைகளான குடியரசுப் படைகள் 2000பேர் வரையில் தங்கி சண்டை செய்யக்கூடிய ஒரு பதுங்கு குழிதான் அது. மருத்துவ வசதிகள், உணவு வசதிகள் என தொடர்ச்சியாக மூன்று வருடங்கள் அதற்குள் வசிக்க முடியும். ஈராக்கில் யுத்தம் இடம்பெற்றுக்கொண்டிருந்தபோது அப் போதைய இராணுவப்பேச்சாளர் அல்ஹதா மொலசத சதாம் ஹூசைனுடன் இரகசியமான தொடர்புகளை மேற்கொண்டிருந்தார். மேற்குறிப்பிடப்பட்ட மூன்று பதுங்கு குழிகளில் அவர் வாழ்ந்துவந்தார். சதாம் ஹூசைன் பதுங்குகுழியில் மறைந்திருப்பது உறுதிப்படுத்தப்பட்டபோதும் பதுங்கு குழிகளுக்கு மாறிமாறி செல்கின்றபோதே அகப்பட்டார். அல்ஹதாவின் கைகளில் இருந்த கையடக்கத் தொலைபேசி அமெரிக்காவினால் இலவசமாக வழங்கப்பட்டதாகும். இதிலிருந்து முழுப்புலனாய்வுத் தகவல்களும் பரிமாற்றம் செய்யப்பட்டது. சதாம் ஹூசைனின் தலைமறைவு வாழ்க்கை இதன் மூலமாகவே கண்டுபிடிக்கப்பட்டது. கடாபி, இடியமீன் போன்றவர்களும் உல கில் பிரசித்திபெற்ற பதுங்குகுழிகளை தயாரித்துவைத்தாலும் கூட அந்த பதுங்குகுழிகளில் மறைந்து வாழ்வதற்கான காலங்கள் அமையவில்லை. யுத்தம் நிறைவடைந்து 05 வருடங்களின் பின்னரே பிரபாகரனின் வீடொன்று கண்டுபிடிக்கப்பட்டது. ஒரு வருடத்திற்கு முன்னதாகவே அது பயன்படுத்தப்பட்டது. இறுதியாக தேசியத்தலைவர் வாழ்ந்த பதுங்குகுழிதான் இந்த சிலந்தியாகும். எறும்பு பதுங்குகுழிகளை தயாரிப்பதில் தொழில்நுட்ப பிரச்சினைகள் எழுந்த மையின் காரணத்தினால் சிலந்தி வகை பதுங்குகுழியினை தயாரித்ததாகவும், பாலஸ்தீன ஜனாதிபதி யசீர் அரபாத்தினது ஆலோசனையின் படியே அமைக்கப்பட்டதாகவும் கூறப்படுகிறது.

உள்நுழையும் வெளிவரும் பாதை கள் மிக இரகசியமானவையாகவே இருந்து வருகின்றது. தேசியத்தலைவரை நாம் சுட்டுவிட்டோம் அல்லது தற்கொலை செய்துகொண்டுள்ளார் என பல்வேறான கதைகள் வெளிவந்தன. விடுதலைப்புலிகளின் இறுதி யுத்தத்தின்போது 30,000இற்கும் மேற்பட்டோர் இருந்ததாக தகவல்கள் தெரிவிக்கும் அதேநேரம், 11000 பேர் வரையில் புணர்வாழ்வு பெற்றிருந்தனர் எனவும், 5000 பேர் வரையில் யுத்தத்தில் இறந்ததாகக் கருதப்பட்டாலும் ஏனை யோர் எங்கே? தளபதிகள் மற்றும் கேணல் தரத்திலுள்ளவர்கள் தப்பிச்செல்லுமிடத்து அல்லது பாதுகாப்பாக இருக்குமிடத்து தேசியத்தலைவர் அவர்கள் பாதுகாப்பாக இருந்திருப்பார் என்பது நம்பத்தகுந்த ஒரு விடயமல்லவா? தேசியத் தலை வரின் மறைவு குறித்து முன்னாள் இராணுவத்தளபதி சரத்பொன்சேகா, விடுதலைப்புலிகளின் முன்னாள் தளபதி கருணா அம்மான், இந்தியாவின் புலனாய்வுப் பிரிவான ரோ, பல்வேறு ஆய்வாளர்கள் மற்றும் ஊடகங்கள் தெரிவித்துள்ள கருத்துக்களை உற்றுநோக்குவோமாகவிருந்தால் முரண் பட்ட கருத்துக்களைத் தோற்று விக்கின்றன. அவை இன்னமும் பிரபாகரன் உயிருடன் வாழ்வதான சந்தேகத்தினை உறுதிப்படுத்தும் ஆய்வுகளாகவே இருக்கின்றன. அவரு டைய உடல் புதைக்கப்பட்டதா? அல்லது எரிக்கப்பட்டதா? எனப்பார்க்குமிடத்து அதற்கான பதில் இன்றுவரை இல்லை.

உலகின் மிகப்பெரும் தலைவர்கள் மறைந்திருக்கக்கூடிய பதுங்குகுழிகளை இலகுவான முறையில் கண்டுபிடித்து விடமுடியாது. கடந்த 05 வருடங்களுக்கு முன்னர் ஒசாமா பின்லேடன் பாகிஸ்தானின் கந்தகார் பகுதியில் உள்ள மலைத்தொடர்களில் பதுங்கியிருந்தபோது, 60அடி ஆழத்தில் சென்று வெடிக்கக்கூடிய வெடிகுண்டுகளைத் தயாரித்து தாக்குதலும் நடாத்தியது அமெரிக்கா. இதன் காரணமாக சதாம் ஹூசைன் அவர்கள் தனது பதுங்கு குழியின் வியூகங்களை மாற்றியமைத்துக்கொண்டார். மலைத் தொடர்களில் அமைக்கப்பட்ட பதுங்குகுழிகளை அமெரிக்க அரசாங்கம் தாக்கியழித்தமையின் காரண மாக சாதாரண ஒரு வீடொன்றினை தெரிவுசெய்துகொண்டு அங்கே தங்கியிருந்தார். அவரை அமெரிக்கரசு கண்டுபிடித்த விதம் பிரம்மிக்கத்தக்கது. இவருடைய இரத்த மாதிரியைக்கொண்டே இவர் இந்தப்பகுதியில் இருப்பதாக அறியப்பட்டது. அமெரிக்காவின் புலனாய்வுத்துறைக்கு அகப் படாதவகையிலே ஒசாமாவின் நடவடிக்கைகள் நகர்த்தப்பட்டது. 500முஅஇற்கு அப்பாற்சென்றே தனது தொலைத்தொடர்பு நடவடிக்கைகளை மேற்கொள்வார். இவ்வாறான தந்திரோபாயங்களைப் பயன்படுத்தியிருந்தபோதிலும் அவர் பிடிபட்டு பின்னர் சுட்டுக்கொல்லப்பட்டு புதைக்கப்பட்டார் என்பதும் வரலாறு.

சர்வதேச மட்டத்தில் பேசப்பட்டு வந்த விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபா கரன் அவர்கள் உலக நாடுகளுக்கே அச்சுறுத்தலாகத் திகழ்ந்தார் என்றால் அவரது உடலை மட்டும் ஏன் மறைத்தார்கள் என்பது கேள்விக்குறி. குறிப்பாக சதாம் ஹூசைன் அவர்கள் தூக்கிலிடப்பட்டார். கடாபி அவர்கள் பிடிபட்டு கொலை செய்யப்பட்டார். ஒசாமா பின்லேடன் அமெரிக்க அரசினால் பிடிக்கப்பட்டு புதைக்கப்பட்டார். இவ்வாறு வரலாறுகள் இருக்க விடுதலைப்புலிகளின் தலைவர் பிரபாகரன் அவர்கள் மட்டும் ஏன் தெரியப்படுத்தப்படவில்லை என்ற கேள்வியும் எழுப்பப்படுகின்றது. இராணுவத்தின் சூட்டு இலக்கில் கொலை செய்யப்பட்டவர் பிரபாகரன் தானா என்பதும் கேள்விக்குறி. இந்திய அரசிற்கு உயிருடனோ, பிணமாகவோ தேவைப்பட்டவர்தான் பிரபாகரன். அவ்வாறிருக்க அவர் எரிக்கப்பட்டுவிட்டார் அல்லது புதைக்கப்பட்டுவிட்டார் அதற்கான அடையாளர்கள் கூட இன்று இல்லை எனக்கூறும்போது ஒரு வேடிக்கைக்குரிய நிகழ்வாகவே இது இருக்கிறது. பிரபாகரனால் அமைக்கப்பட்ட பதுங்குகுழிகளில் உல கில் பிரசித்திபெறாத பதுங்குகுழிகளே கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. நிலைமை இவ்வாறிருக்க பிரபாகரனின் தாக்குதலுக்குப் பயந்தே நிலக்கீழ் சொகுசு மாளிகை அமைக்கப்பட்டதாக முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் தெரிவித்திருக்கும் கருத்தில் உண்மைத்தன்மை இருந்தாலும் கூட மறைந்திருப்பதற்காக அமைக்கப்படுவதே பதுங்குகுழிகளாகும். இராணுவ முகாம்களில் கூட நிர்மாணிக்கப்பட்ட பல்வேறு பதுங்கு குழிகள் இருக்கின்றன. அவை ஒருபோதும் யாருக்கும் தெரியப்படுத்தப்படமாட்டாது.

இதுவரை காலமும் இந்த பதுங்குகுழிக்குள் ஏதாவதொரு சந்திப்புக்கள் நடை பெற்றிருக்கின்றதா? இல்லை. அக் காலத்தின்போது விடுதலைப்புலிகள் விமானத்தாக்குதல்களையும், தற் கொலைத் தாக்குதல்களையும் கொழும்பின் அனைத்துப் பகுதிகளிலும் மேற்கொண்டிருந்தனர். அப்போதெல்லாம் பதுங்குகுழிகள் தொடர்பான கதைகள் வெளிவரவில்லை. இரகசியமான சந்திப்புக்களுக்காகவும், பிரபாகரனின் தாக்குதலுக்குப் பயந்தும் அமைக்கப்பட்டதாகவும் கூறும் மஹிந்த ராஜபக்ஷ அவர்கள் சற்றுச் சிந்திக்கவேண்டும். தானாகவே முன்வந்து விடயத்தை வெளிப்படுத்தாதபோது பிற ரால் கண்டுபிடிக்கப்பட்டபோது, பிரபா கரனின் தாக்குதலுக்குப் பயந்துதான் இதனை அமைத்தேன் எனக்கூறுவது விசாரணைகளிலிலிருந்து தான் தப்பித்துக் கொள்வதற்கான ஒரு நடவடிக்கையாகும். ஆனால் தேசியத்தலைவரினால் நிர்மாணிக்கப்பட்ட பதுங்குகுழிகள் இன்னமும் கண்டுபிடிக்கப்படவில்லை. மர்மம் இன்னமும் தொடர்கின்றது.

விடுதலைப்புலிகளின் இடைநிலைத் தளபதிகள் எங்கே என்ற கேள்வி தொடர்கின்றது. போராட்ட வரலாற்றில் பல்வேறு சாதனைகளை நிலைநாட்டியவர்தான் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன். மூன்று தசாப்த காலங்கள் இலங்கை அரசுடன் போராடி பல்வேறு வெற்றிகளைக் குவித்த பெருமை அவரைச்சாரும். நோர்வே தனது செய்மதி தொழில்நுட்பத்தினை தேசியத்தலைவருக்கு வழங்கியிருந்தது. இந்தத் தொழில்நுட்பமானது பதுங்குகுழிகள் இருக்கக்கூடிய இடங்களில் வேலைசெய்யக்கூடியது. இவற்றினுடைய தொடர்பாடல்களை இடைமறித்துக்கேட்க முடியாது. அவ்வாறு தொழில்நுட்பம் வாய்ந்த கருவிகளை வழங்கிய நோர்வே அரசு இறுதியில் விடுதலைப்புலிகளின் போராட்டம் அழிக்கப்பட காரண மாக இருந்தது. இன்று போர்க்குற்றம், இனப்படுகொலைகள் என்றெல்லாம் வாய்நிறைய இவர்கள் கத்தினாலும் விடுதலைப்புலிகளின் போராட்டத்தை மழுங்கடித்ததில் பங்குதாரராக நோர்வே அரசும் இருக்கின்றது. சர்வதேச ரீதியில் அங்கீகாரம் பெற்றிருக்கக்கூடிய 2600 புலனாய்வுக் கட்டமைப்புக்கள் இயங்கி வருகின்றன. இவற்றுள் ஸ்கொட்லாந்து புலனாய்வு அமைப்பின் கட்டமைப்பு முதன்மை வகிக்கிறது. தொடர்ந்து அமெரிக்காவின் ஊஐயு, இஸ்ரேலின் மொசார்ட் ஆகியவை தொடர்கின்றது. இதிலும் விடுதலைப்புலிகளின் புலனாய்வுக் கட்டமைப்பானது டெசி என்று அழைக்கப்படுகிறது. இதனுடைய அங்கத்தவர்கள் உலகத்திலுள்ள அனைத்து நாடுகளிலும் இருக்கின்றார்கள். அதிகமாக ஆசிய ஐரோப்பிய பிராந்தியத்திலும் இவர்களது செயற்பாடுகள் வலிமைமிக்கதாக காணப்படுகின்றது. பொட்டம்மான், குமரன் பத்மநாதனுக்கும் இடையில் நிகழ்ந்த முறுகல் நிலையின் காரணமா கவே விடுதலைப்புலிகளின் அமைப்பான டெசி என்ற புலனாய்வு அமைப்பு இலங்கை இராணுவத்தினால் கண்டுபிடிக்கப்பட்டது. இலங்கையின் புலனாய்வு அமைப்பான வுஐனு என்ற கட்டமைப்பு வளர்ச்சி பெறுவதற்குக் காரணமாக இருந்தது விடுதலைப்புலிகளது தொழில்நுட்பம் தான்.

குறிப்பாக தாக்குதல்கள் நிகழ்ந்த வேளைகளில் அவற்றை ஒளிநாடாக்கள் மூலம் பதிவுசெய்து வெளிப்படுத்தியதன் விளைவு இராணுவத்தினர் தாக்குதல் வியூகங்களை இனங்காண்பதற்கு காரண மாக அமைந்தது. ஆனாலும் தேசியத் தலை வர் பிரபாகரன் அவர்கள் எங்கிருக்கிறார் என்ன நடந்தது என்ற விடயத்தில் சர்வதேச புலனாய்வு மற்றும் உள்ளூர் புலனாய்வு மற்றும் ஆய்வாளர்கள் என அனைவரும் ஏமாற்றமடைந்தனர் என்றே கூறவேண்டும். அதாவது அவரது மரணத்திற்கு ஆதாரங்கள் ஏதும் இல்லை. பிரபாகரனின் உடலை நேரடியாக பார்த்து உறுதிசெய்த கருணாவின் கருத்துக்களில் முரண்பாடுகள் இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ மற்றும் கோத்தபாய ஆகியோருக்கு பிரபாகரன் அவர்களை உயிருடன் காண்பித்த பின்னரே அவரது தலையினை கோடரியால் தாக்கி கொலைசெய்ததாகக் கூறப்படுகின்றது. இதன் உண்மைத் தன்மையைக் கண்டறிய தவறிவிட்டது இந்தப் புலனாய்வுகள். இன்னமும் விடுதலைப்புலிகளின் சிறப்புப் பதுங்குழிகளை தேடிக் கொண்டிருக்கிறார்கள். மணலாற்று காட்டுப்பகுதிகளில் விடுதலைப்புலிகளின் பல்வேறான சிறப்பு முகாம்கள் இருந்துவந்தன. அதுமட்டுமல்லாது முள்ளிவாய்க்கால் கரையோரப் பகுதிகளிலும் நிலத்துக்கடியில் இருந்து கொண்டு நீர்மூழ்கிப் கப்பல்கள் மூலம் கடல்மார்க்கமாகப் பயணிப்பதற்காக மீன் பதுங்குகுழிகள் அமைக்கப்பட்டிருந்தது. இது சர்வதேச நாடுகள் தமது பாதுகாப்பிற்காக அமைத்துக்கொள்ளும் பதுங்குகுழிகளேயாகும்.

மந்துவில் பகுதியில் விடுதலைப்புலிகளின் மீன் வடிவில் அமைந்த நீர்மூழ்கியொன்றினை இராணுவத்தினர் கைப்பற்றிப் பார்வைக்கு வைத்துள்ளனர். பல பதுங்கு குழிகள் தேசியத்தலைவரினால் அமைக்கப்பட்டதாகக் கூறப்படுகின்றது. பதுங்குகுழிகளில் மூன்று வருடங்கள் வசிக்கலாம் எனினும் சில பதுங்கு குழிகளில் தொடர்ச்சியாக 21 வருடங்கள் என மாறி மாறி வசிக்க முடியும். ஒரு பதுங்குகுழியில் இருந்து இன்னொன்றுக்கு மாறும்போது அல்லது இவர்களுடன் தொலைத்தொடர்புகளைக் கொண்டிருப்பவர்கள் ஊடாகவும் மாத்திரமே மறைந்திருப்பவர்களைக் கண்டுபிடிக்கமுடியும். இவ்வாறு தேசியத்லைவரின் பல பதுங்குகுழிகள் இன்னமும் மர்மமாகவே இருக்கின்றது என்பது குறிப்பிடத்தக்கது.

இரணியன்

SHARE