சமய விவகார அமைச்சின் பொறுப்புக்களை பொதுமக்கள் தொடர்பு அமைச்சர் கலாநிதி மேர்வில் சில்வாவிடம்.
ஒப்படைக்க ஜனாதிபதி தீர்மானித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைசின் பொறுப்புக்களை பிரதமர் டி.எம். ஜயரட்னவிடமிருந்து ஜனாதிபதி வாபஸ் பெற்றுக்கொள்ள உத்தேசித்துள்ளார். பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சின் பொறுப்பினை ஜனாதிபதியே பொறுப்பேற்க உள்ளார்.
அமைச்சின் பிரதி அமைச்சுப் பொறுப்புக்கள் மேர்வின் சில்வாவிடம் ஒப்படைக்கப்பட உள்ளது. நாட்டில் மத நல்லிணக்கத்திற்கு குந்தகம் ஏற்படும் வகையில் அண்மைக் காலமாக சில சம்பவங்கள் இடம்பெற்று வருவதாகவும், இதனை தடுக்க உரிய நடவடிக்கை எடுக்கப்பட வேண்டுமென்ற காரணத்தினால் இவ்வாறு நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது. இதன்படி விரைவில் பௌத்த சாசன மற்றும் சமய விவகார அமைச்சுப் பதவியை பிரதமரிடமிருந்து பறித்து, ஜனாதிபதி ஏற்றுக்கொள்வார் எனத் தெரிவிக்கப்படுகிறது.