பட்டினியால் வாடிய சிறுவன் எலும்புக்கூடாய் மீட்பு

543

ஜப்பானில் தந்தை ஒருவர் தனது இறந்த மகனின் உடலை 5 ஆண்டுகளாய் மறைத்து வைத்த செயல் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஜப்பான் தலைநகர் டோக்கியோ மாகாணத்தில் லொறி ஓட்டுநராய் பணிபுரியும் யுகிஹிரோ சைடோ என்ற நபர் தனது மனைவி மகனுடன் (70) வசித்து வந்தார்.

இவருக்கும் இவரது மனைவிக்கும் அடிக்கடி வாக்குவாதம் வந்துகொண்டிருந்ததால்,கடந்த 2005ம் ஆண்டில் அவர் மனைவி பிரிந்து சென்றுவிட்டார்.

இவர் மனைவி மீதுள்ள கோபத்தால் மகனுக்கு சரியாக உணவளிக்காமல் அவர் இருந்துள்ளதால் பட்டினியில் வாடிய சிறுவன் பரிதாபமாய் உயிரிழந்துள்ளான்.

மகனின் இறப்பை பார்த்த அவனது தந்தை செய்வதறியாமல் அவனது சடலத்தை வீட்டிலேயே மறைத்து வைத்துள்ளார்.

இந்நிலையில் வெகுநாட்களாகியும் இவரது மகன் பள்ளிக்கு வராததால் சந்தேகமடைந்த பள்ளி நிர்வாகம் பொலிசாரிடம் புகார் ஒன்றை அளித்துள்ளது.

இதனையடுத்து சைடோவிடம் பொலிசார் நடத்திய விசாரணையில், குற்றத்தை ஒப்புகொண்ட கைதான அவர், வீட்டில் மறைத்து வைக்கப்பட்டிருந்த சிறுவன் உடலை காண்பித்துள்ளார்.

மேலும் அந்த சிறுவனின், 13வது பிறந்த நாளில், அவன் உடல் எலும்புக்கூடாய் கண்டெடுக்கப்பட்டது சோகத்தை அதிகரித்துள்ளது.

SHARE