மேற்படி போட்டிகள் முல்லைத்தீவு சிலாபத்துறை கொன்மன்ற் பாடசாலையில் 31.05.2014 சனிக்கிழமை காலை 9.00 மணியளவில் மாவட்ட செயலதிபர் திரு.வேதநாயகம் மற்றும் விளையாட்டுத்துறை அதிகாரி ஆகியோரின் தலைமையின் கீழ் குத்துச்சண்டை, கராத்தே போட்டிகள் ஆரம்பநிகழ்வாக இடம்பெற்றது. அதனைத்தொடர்ந்து சனிக்கிழமை மற்றும் ஞாயிற்றுக்கிழமை இறுதிப்போட்டிகள் நடைபெற்றன. இதில் குத்துச்சண்டை சம்பியன் போட்டியில் முல்லைத்தீவு மாவட்டம் அதிக பதக்கங்களை வென்றதுடன் கராத்தே போட்டியிலும் பல பதக்கங்களை வென்றது. இங்கு நடைபெற்ற மாகாணமட்டப் போட்டிகள் அடுத்த மாத காலப்பகுதியில் தேசிய மட்டத்தில் நடைபெறவிருப்பதால் பல பாடசாலை மாணவர்கள் உட்பட ஏனைய நபர்களும் இதில் தேர்வுபெற்றுள்ளனர். இதில் கலந்துகொண்ட வடமாகாண மாவட்டங்கள் தொடர்ந்தும் தேசிய மட்டத்தில் அதிக பதக்கங்களை வெற்றிபெரும் என வெற்றி பெற்ற மாணவர்கள் கூறுகையில் அறிய முடிந்தது. தகவலும் படங்களும் – ச. பார்த்தீபன்