|
கைப்பேசி பாவனையாளர்களுக்கு சிறந்த தொழில்நுட்பத்தினைக் கொண்ட கைப்பேசிகளை வடிவமைத்து வழங்கும் அப்பிள் நிறுவனம் அடுத்ததாக iPhone 7 இனை அறிமுகம் செய்யவுள்ளது.2016 ஆம் ஆண்டின் முற்பகுதியில் அறிமுகப்படுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படும் இக் கைப்பேசியின் சில சிறப்பம்சங்கள் தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளது.
இதன்படி 3GB RAM இனை பிரதான நினைவகமாகக் கொண்டுள்ளதுடன், நீர் உட்புகவிடாத தொழில்நுட்பத்தினையும் கொண்டதாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் iPhone 6C எனும் குறுந்திரை கொண்ட கைப்பேசியினை அறிமுகம் செய்யவுள்ளமை தொடர்பான தகவல்களும் வெளியாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது. |