இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள்பெண்ணை பொல்லுகள், தடிகளால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்

755
கிளிநொச்சி- செல்வாநகர் பகுதியில் போரில் காயமடைந்து நிரந்த அங்கவீனமாக்கப்பட்ட பெண்ணை பொல்லுகள், தடிகளால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்குறித்த பெண்ணின் கணவர் எங்கே எனக்கேட்டு பெண்ணை கடுமையாக தாக்கிவிட்டுத் தப்பிச் சென்றிருக்கின்றனர்.

குறித்த சம்பவம் தொடர்பாக மேலும் தெரியவருவதாவது,

கிளி.செல்வாநகர் நாகதம்பிரான் ஆலயத்திற்கு சமீபமாக வீடொன்றில் வசிக்கும் அனுஸ்குமார் சுமதி என்ற இரு பிள்ளைகளின் தாயான முன்னாள் போராளியின் வீட்டிற்கு இன்றைய தினம் மாலை 5மணியளவில்,

முழுமையாக முகம் மறைக்கப்பட்ட தலைக்கவசங்கள் அணிந்தவாறு இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள், வீட்டினுள் புகுந்து உன்னுடைய கணவர் எங்கே என குறித்த பெண்ணிடம் கடும் தொனியில் கேட்டுள்ளதுடன், அந்தப் பெண்ணை பொல்லுகள், தடிகளால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்.

இதன் பின்னர் குறித்த பெண் கூச்சலிட்டு அயலவர்களை அழைத்துபோது, அயலவர்கள் அந்த இடத்தில் கூடிய நிலையில் மர்மநபர்கள் அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர்.

மேலும் குறித்த பெண்ணும், அவருடைய கணவரும் தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் போராளிகளாக இருந்துள்ளனர்.

இந்நிலையில் போரில் காயமடைந்து நிரந்தர அங்கவீனமான நிலையில் (இடுப்பிற்கு கீழ் இயங்காது) படுகையில் குறித்த பெண் இருந்துள்ளார்.

கணவர் போரின் பின்னர் வெளிநாடு ஒன்றிற்குச் சென்றுள்ளார். மேலும் தற்போது இந்தப் பெண் அவருடைய பெற்றோரின் கண்காணிப்பில் இருக்கின்றார்.

இந்நிலையில் கணவரை தேடிச்சென்ற நபர்களே தன்னை தாக்கியதாக அவர் தெரிவித்துள்ளார்.

எனினும் கணவரை எதற்காக, யார் தேடினார்கள் என்பது தொடர்பாக தனக்கு எதுவும் தெரியாது என அவர் கூறியிருப்பதுடன், தற்போது அவர் கிளிநொச்சி பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இரு மோட்டார் சைக்கிள்களில் வந்த மர்ம நபர்கள்பெண்ணை பொல்லுகள், தடிகளால் கண்மூடித்தனமாக தாக்கியுள்ளனர்

SHARE