விடுதலைப்புலிகள் அமைப்பு மே 5, 1976ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. இவ்வமைப்பானது இலங்கை அரசுகளின் தமிழர் தொடர்பான கொள்கைகளால் விரக்தியுற்ற பல இளைஞர்களால் தொடங்கப்பட்டது. தொடக்கத்தில் இலங்கைக் காவல் துறையினர், மற்றும் உள்ளூர் அரசியல்வாதிகள் போன்ற இலங்கை அரசின் இலக்குகள் மீது சிறிய அளவிலான தாக்குதல்களை நடத்தி வந்தனர். 1975ஆம் ஆண்டு யாழ் நகர முதல்வர் அல்பிரட் துரையப்பா சுட்டுக்கொலைச் செய்யப்பட்டமை புலிகளால் செய்யப்பட்ட தாக்குதலாக குற்றஞ்சாட்டப்பட்டது. அக்காலப் பகுதியில் புலிகள் அமைப்பு ஏனைய ஈழ இயக்கங்களுடன் இணைந்தே செயற்பட்டு வந்தது. 1984 ஏப்ரல் மாதம் உத்தியோகப்பட்சமாக தமிழீழ விடுதலை இயக்கம், ஈழ புரட்சிகர மாணவர் இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி என்பன ஒன்றிணைந்த ஈழப்போராட்ட அமைப்பான ஈழ தேசிய விடுதலை முன்னணியில் இணைந்தன.
1986ஆம் ஆண்டு புலிகள் ஈழ தேசிய விடுதலை அமைப்பில் இருந்து விலகி அப்போது பெரிய ஈழ இயக்கமாக காணப்பட்ட தமிழீழ விடுதலை இயக்கத்தின் உறுப்பினர்கள் மீதும் அதன் தளங்கள் மீதும் தாக்குதல் தொடுத்தது. அடுத்த சில மாதங்களில் தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலை மையும் சில நூறு போராளிகளும் தேடிக் கொல்லப்பட்டனர். இதன் மூலம் தமி ழீழ விடுதலை இயக்கம் பலமிழந்தது. சில மாதங்களுக்குப்பின் புலிகள் அமைப்பு ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி மீதும் தாக்குதல் நடத்தியது. இதனால் இவ்வமைப்பு யாழ்குடா நாட்டைவிட்டு வெளியேறியது.
இதன் பின்னர் புலிகள் அமைப்பு மீதமிருந்த ஈழ இயக்கங்களை தம்முடன் இணைந்துகொள்ளுமாறு கோரிக்கை விடுத்தனர். இது தொடர்பான அறிவித்தல்கள் யாழ்ப்பாணத்திலும் சென்னையிலும் விடுக்கப்பட்டன. தமிழீழ விடுதலை இயக்கம், ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னனி என்ற முன்னணி ஈழ இயக்கங்கள் அழிக்கப்பட்ட நிலையில் சுமார் 20 ஏனைய இயக்கங்கள் புலிகள் அமைப்பினுள் உள்வாங்கப்பட்டன. இதன் மூலம் யாழ்ப்பாணம் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டில் வந்தது. புலிகள் தமிழர் பிரச்சினைக்கு கொடுக்கப்பட வேண்டிய தீர்வுதொடர்பில் நிலையான கொள்கை இல்லாத இயக்கங்கள் செயற்படாமல் இருப்பது போராட்டத்துக்கு நன்மை பயக்கும் எனக் கருதியதாகக் கருதப்படுகிறது. இத்தாக்குதல்களின் விளைவாக புலிகள், ஈழ இயக்கங்களில் முதன்மை அமைப்பாக உருவெடுத்தனர்.
1987ஆம் ஆண்டு புலிகள் பொருளாதார, அரசியல், இராணுவ இலக்குகள் மீது தற்கொலைத் தாக்குதல்களை மேற்கொள்ளும் கரும்புலிகள் அணியை உருவாக்கி இலங்கை இராணுவத் தளம் ஒன்றின் மீது தாக்குதல் நடத்தி 40 இராணுவத்தினரைக் கொன்றனர். புலிகளுக்கும் இலங்கை அரசுக்கும் இடையே ஒரு போர் நிறுத்தம் நடைமுறைப்படுத்தப்பட்டு பேச்சு வார்த்தைகள் தொடங்கப்பட்டன. இந்த சமாதானப் பேச்சுவார்த்தையிலிருந்து பின்வாங்கிய புலிகள் இயக்கம் 1990 ஜூன் 11 ஆம் நாள் தொடக்கம் பல தொடர் தாக்குதல்களைத் தொடுத்தனர். இதன் மூலம் முதல் வாரத்தில் மட்டும் 450 பேர் வரை பலியாகினர்.
1990களில் போர் தொடர்ந்து நடைபெற்று வந்தது, இக்காலப்பகுதியில் புலிகள் இயக்கத்தால் இரண்டு முக்கிய கொலைகள் செய்யப்பட்டன. முதலாவது 1991ஆம் ஆண்டு முன்னாள் இந்தியப் பிரதமர் ராஜீவ்காந்தி தமிழ்நாட்டில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் கொலை செய்யப்பட்டார், இரண்டாவது 1993ஆம் ஆண்டு இலங்கை அதிபர் ரணசிங்க பிரே மதாசா ஐக்கியதேசியக் கட்சியின் மே நாள் ஊர்வலத்தின்போது கொழும்பில் கொலை செய்யப்பட்டார். இவ்விரண்டு சந்தர்ப்பங்களிலும் தற்கொலைத் தாக்குதல்கள் மேற்கொள்ளப்பட்டன.
1994ஆம் ஆண்டில் சந்திரிக்கா பண்டாரநாயக்க குமாரதுங்க இலங்கை அதிபராக தெரிவுசெய்யப்பட்டதைத் தொடர்ந்து சிலகாலம் போர் நிறுத்தம் நடைமுறையில் இருந்தது. சந்திரிக்கா அரசுடன் புலிகள் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர். சந்திரிக்கா அரசு தீர்க்கமான ஆக்கபூர்வமான தீர்வு நோக்கி செல்லத்தவறியது. இதனால் புலிகள் பேச்சுவார்த்தையில் இருந்து விலகுவதாக அரசுக்கு அறிவித்தனர். இதன்பின்னர், 1995 ஏப்ரல் மாதம் புலிகள் திருகோணமலை துறைமுகத்தில் இலங்கை கடற்படையினரின் இரண்டுக் களங்களை தாக்கியழித்தனர். இதனைத் தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட தொடர் நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் முதன்மைத்துவம் வாய்ந்த யாழ்ப்பாண நகரையும் குடா நாட்டையும் புலிகளிடமிருந்து கைப்பற்றிக்கொண்டது.மேலும் சில நடவடிக்கைகள் மூலம் இலங்கை இராணுவம் புலிகள் வசமிருந்த வன்னிப் பெருநிலப்பரப்பில் முதன்மை நகரம் கிளிநொச்சியையும் பல சிறிய நகரங்களையும் கைப்பற்றிக்கொண்டது. ஆனால் 1998ஆண்டு முதல் புலிகள் தாக்குதல்களைத்தொடுத்து வன்னிப் பெருநிலப்பரப்பின் பல பகுதிகளை மீள் கைப்பற்றிக்கொண்டனர். தொடர் போர்களின் முடிவில் போரியல் முதன்மைத்துவம் வாய்ந்த இடத்தில் அமைந்துள்ள ஆனையிறவுத் தளம் 2000 ஆம் ஆண்டு புலிகளால் கைப்பற்றப்பட்டது.யாழ்ப்பாணம் நகரின் எல்லைவரை முன்னேறிய புலிகள் பின்னர் பின்வாங்கி முகமாலையில் தமது முன்னரங்க நிலை களை அமைத்துக்கொண்டனர்.
2001ஆம் ஆண்டு செப்டம்பர் 11 தாக்குதல்களில் பின்னணியில் புலிகள் இயக்கம் தமது அரசியல் இராணுவ அரசியல் அணுகுமுறை யில் மாற்றங்களைச் செய்தனர். தமிழ் மக்களது பிரச்சினைகளை தீர்க்கக்கூடிய தேவைகளை நிறைவு செய்யக்கூடிய கூட்டாட்சி அமைப்பை ஏற்பதை பரிசீலிக்க முன்வந்தனர். இலங்கை அரசு முன்னரே நோர்வேயை பேச்சுக்களை ஆரம்பிக்க வருமாறு அழைத்திருந்தாலும் அதுவரை போரை நிறுத்துவதற்கு அவர்களால் முடியாமல் போனது.
டிசம்பர் 2001இல் நடைபெற்ற பொதுத்தேர்தலில் ரணில் விக்கிரமசிங்க வெற்றிபெற்று பிரதமரானதைத் தொடர்ந்து இரணுவத்தினரும் புலிகளும் போர் நிறுத்தமொன்றை மேற்கொண்டனர். இதன் தொடர்ச்சியாக 2002ஆம் ஆண்டு இலங்கை அரசும் புலிகளும் போர் நிறுத்த ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டன. இதன் ஒரு அங்கமாக, போர் நிறுத்தத்தை கண்கானிக்க நோர்வே தலைமையில் ஏனைய நோர்டிக் நாடுகளின் பிரதிநிதி களையும் கொண்ட இலங்கைப் போர் நிறுத்தக் கண்காணிப்புக் குழுவொன்று அமைக்கப்பட்டது.
வெளிநாடுகளில் நடைபெற்ற ஆறு சுற்றுப் பேச்சுவார்த்தைகளின் பின்னர் 2003ஆம் ஆண்டளவில் பேச்சு வார்த்தைகளில் முறுகல் நிலை ஏற்பட்டது. இக்காலப்பகுதியில் தெற்கிலும் அரசியல் மாற்றங்கள் ஏற்பட்டன. அப்போது ஜனாதிபதியாக இருந்த சந்திரிக்கா, இலங்கை பிரதமாரக இருந்த ரணில் விக்கிரமசிங்கவையும் அவரது அரசையும் புலிகள் மீது மென்மையான அணு முறையைக் கையாள்கிறார்கள் எனக் குற்றஞ்சாட்டி ஆட்சியைக்கலைத்தார். எனினும் இக்காலப்பகுதியில் பாரிய போர் நடவடிக்கைகள் நடைபெறவில்லை.
ஈழப்போராட்டம் உருவானதற்கான காரணங்கள்
தனிச்சிங்களச் சட்டம், பௌத்தம் அரச சமயமாக்கப்படல், இலங்கைக் குடியுரிமைச் சட்டம், கல்வி தரப்படுத்தல் சட்டங்கள், திட்டமிட்ட சிங்கள குடியேற்றம், அரச பயங்கரவாதம், யாழ் பொதுநூலகம் எரிப்பு, சிங்கள மயமாக்கம், வேலைவாய்ப்பில் இனப் பாகுபாடு, சிங்களப் பேரினவாதம், ஆட்கடத்தல்களும் காணாமல்போதல் களும், அரச சித்திரவதை, பாலியல் வன்முறை, இலங்கைத் தமிழர் இனவழிப்பு, இலங்கையில் மனித இனத்துக்கெதிரான குற்றங்கள் போன்றன.
விடுதலைப்புலிகளின் போராட்டம் ஆரம்பித்தமைக்கான காரணங் கள் இவ்வாறிருக்க, தமி ழீழ விடுதலைப்புலிகளின் தலைவர் 1989ஆம் ஆண்டு முதலாவது மாவீரர் தின உரையினையும் இறுதியாக 2008ஆம் ஆண்டும் ஆற்றியிருந்தார். இதற்கிடையில் இந்திய இராணுவம் இருந்த காலகட்டத்தினைத் தவிர்த்து 16 மாவீரர் தின உரைகள் பிரபாகரனால் நிகழ்;த் தப்பட்டிருக்கின்றது. தமிழ்மக்களின் எதிர்பார்ப்பு என்னவெனில் தேசியத் தலைவர் பிரபாகரன் அவர்கள் இறுதி நேர யுத்தத்தில் கொலைசெய்யப்படவில்லை என்பதேயாகும். ஆனால் விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் யுத்தத்தில் கொல்லப்பட்டுவிட்டதாக இலங்கையரசு அறிவித்திருந்தது. அதேநேரம் விடுதலைப்புலிகளுடன் இருந்து பிரிந்துசென்ற கருணா அம்மான் அவர்களால் கொலை செய்யப்பட்டவர் பிரபாகரனே எனவும் உறுதிசெய்யப்பட்டிருந்தது.
ஆனால் பிரபாகரனின் இறப்பில் பல்வேறு சந்தேகங்கள் எழுப்பப்பட்டன. உலகளாவிய ரீதியில் இராணுவ ஆய்வாளர்களினது கருத்தின்படி அது பிரபாகரனது உடல் இல்லையெனவும் அவரைப்போன்ற உடலமைப்பில் பலர் இருக்கின்றார்கள் எனவும் கூறப்பட்டிருக்கும் அதேநேரம் தொழில்நுட்பத்தினைப் பயன் படுத்தி அவரின் இறப்பு உறுதி செய்யப்பட்டிருப்பதானது நம்பமுடியாத ஒரு விடயமாகும். விடுதலைப்புலிகளின் அமைப்பைப் பொறுத்தவரை அவ்வமைப்பின் முக்கியஸ்தர்களை அடிக்கடி சந்தித்துப்பேசுவதுபோல பிரபா கரனைச் சந்திக்கமுடியாது. மக்கள் தினம் என அவர் தனக்கேயுரிய ஒரு நாளினை வைத்திருக்கின்றார். அன்று மாத்திரம் அவர் மக்கள் முன்தோன்றி போராட்டம் பற்றியும், அடுத்தகட்ட நகர்வுகள் பற்றியும் தெட்டத்தெளிவாகக் கூறுவார். இதனைவிட சர்வதேச ராஜதந்திரிகளுடன் பேச்சுவார்த்தைகள் என்றால் மாத்திரமே அதில் பிரசன்னமாகுவார்.
சமாதான காலப்பகுதயில் விடுதலைப் புலிகளின் கட்டுப்பாட்டுப்பகுதியில் நடைபெற்ற ஊடகவியலாளர்களின் மாநாடு தேசிய தலைவரின் போராட்டத்திற்குக் கிடைத்த மாபெரும் வெற்றியாகும். இவ்வாறாகவிருக்க விடுதலைப்புலிகளுடன் 54 சர்வதேச நாடுகளும், 22 சர்வதேச அமைப்புக்களும் பேச்சுவார்த்தைகளில் ஈடுபட்டது. அது மட்டுமல்லாது விடுதலைப்புலிகளின் போராட்டத்திற்கு தமது ஒத்துழைப்புக்களை முழுமையாக வழங்கியிருந்தன. திடீரென விடுதலைப்புலிகளின் போராட்டம் பயங்கரவாதப்போராட்டம் எனத்தீர்மானித்து குறிப்பாக அமெரிக்கா, இந்தியா, சீனா போன்ற நாடுகள் இணைந்து பிரபாகரனின் தலைமையிலானப் போராட்டத்தை அழித்தொழிப்பதற்கான நடவடிக்கைகளை இலங்கை அரசுடன் இணைந்து மேற்கொண்டன. அதன்பிரகாரம் விடுதலைப்புலிகளின் போராட்டம் முற்றுப்பெற்றது. தேசியத்தலைவர் மாவீரர் தின உரையினை ஆற்றாமைக்கான முக்கிய காரணங்கள் என்னவென்பதைப் பற்றிப் பார்க்கும்பொழுது, தமிழ்மக்களுக்கான தீர்வுகளை இலங்கை அரசு எவ்வாறு வழங்கப்போகின்றார்கள்.விடுதலைப்புலிகளை பயங்கர வாதிகள் என முத்திரைகுத்தி போராட்டத்தினைத் தொடங்கியவர்கள் போர் முற்றுப்பெற்றுவிட்டது எனக்கூறிக்கொள்ளும் அதேநேரம் பயங்கரவாத தடைச்சட்டத்தினை இன்னமும் நீக்கவில்லை. விடுதலைப்புலிகளின் அடுத்த நிலையிலுள்ள தளபதிகள் இன்னமும் இரகசிய புலனாய்வினரின் பிடியில் இருக்கின்றார்கள். அவர்கள் விடுதலை செய்யப்படவேண்டும்.
தமிழ் மக்களுக்காகத் தேசியத் தலைவரினால் உருவாக்கப்பட்ட தமிழ்த்தேசியக்கூட்டமைப்பு அரசியல் ரீதியான நடவடிக்கைகளை மேற்கொள்கின்றதா? யுத்தத் தால் பாதிக்கப்பட்டுள்ள வட கிழக்கின் மீள்குடியேற்றங்கள் நிவர்த்திசெய்யப்படவில்லை. விடு தலைப்புலிகளின் ஏகபிரதி நிதிகளாகக் கருதப்படுகின்ற தமிழ்த் தேசியக்கூட்டமைப்பு தமிழ் மக்களின் மீது கரிசணைகொண்டு செயற்படும் என்கின்ற நம்பிக்கை தேசியத்தலைவருக்கு உண்டு. யுத்தகாலத்தில் போராடிய இராணுவத் தளபதிகளுக்கே பிரபாகரனது இறப்பு என்னவென்பது பற்றி முழுமையாகத் தெரி யாது. இவ்வாறிருக்க தேசியத்தலைவர் இறந்துவிட்டார் என்று கூறுவதனை மக்கள் ஏற்றுக்கொள்வதாகவில்லை. இறுதிநேர யுத்தத்தின்போது பிரபாகரன் எந்த தளபதி களையுமே சந்தித்துக்கொள்ளவில்லை. ஆகவே அவருக்கு என்ன நடந்தது என்பது கூட ஒருவருக்கும் தெரியாது. வரவேண்டிய நேரத்தில் வருவார் என்பதே தமிழ் மக்களுடைய எதிர்பார்ப்பு.
விடுதலைப்புலிகளின் தலைவர் எங்கோ ஓர் மூலையிலிருந்து உரை யாற்றுவாராகவிருந்தால் உலக நாடுகளும், இலங்கை அரசும் அதிர்ச்சியில் மூழ்கிக்கொள்ளும். அதே நேரம் பல்வேறு பிரச்சினைகளுக்கும் முகங்கொடுக்கவேண்டியேற்படும். தேசி யத்தலைவர் இருக்கின்றாரா? இல்லையா? எதிர்வரும் மாவீரர் தினங்களிலாவது தனது உரையினை ஆற்றுவாரா? போன்ற பலவிதமான கேள்விகளுக்கு மத்தியில் தமிழ் மக்களின் வாழ்வு பயணிக்கிறது.
– இரணியன் –